Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரிஷப் பண்ட்டுக்கு வில்லனே இவர்தான்.. இந்திய அணியில் நடந்த ட்விஸ்ட்.. விக்கெட் கீப்பர் யார்?

மும்பை: நீண்ட காலம் கழித்து இந்திய டெஸ்ட் அணிக்கு திரும்ப இருக்கிறார் ரிஷப் பண்ட். இந்திய டெஸ்ட் அணியின் சிறந்த விக்கெட் கீப்பர்களில் ஒருவராக அறியப்படும் ரிஷப் பண்ட், வெளிநாட்டு டெஸ்ட் போட்டிகளில் சர்வசாதாரணமாக அரை சதங்கள் மற்றும் சதங்கள் அடித்து இருக்கிறார்.

தற்போது விபத்தில் சிக்கி, பின் மீண்டு ஒன்றரை ஆண்டுகள் கழித்து மீண்டும் இந்திய டெஸ்ட் அணிக்கு அவர் திரும்ப உள்ளார். ஆனால், இந்த முறை அவருக்கு ஒரு வீரர் கடும் போட்டியாக மாறி இருக்கிறார். அவர் தான் துருவ் ஜுரேல். இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் துருவ் ஜுரேல் அறிமுகம் ஆனார்.

rishabh pant dhruv jurel indian cricket team

அந்த தொடரில் மூன்று போட்டிகளில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆக இடம் பெற்று அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மூன்று போட்டிகளில் 190 ரன்கள் குவித்து இருந்தார். ஒரு அரை சதம் அடித்திருந்தார். அவரது பேட்டிங் சராசரி 63 ஆக இருந்தது. இந்த புள்ளி விவரங்களை காட்டிலும் அவர் பின்வரிசையில் அதிக அழுத்தத்துக்கு நடுவே ரன் குவித்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

அவர் இளம் வயதிலேயே பொறுப்பாக பேட்டிங் ஆடியதையும் முன்னாள் வீரர்கள் பலரும் பாராட்டி இருந்தனர். தாற்போது ரிஷப் பண்ட் அணிக்கு திரும்பி உள்ள நிலையில், இந்திய டெஸ்ட் அணியில் துருவ் ஜுரேல் மாற்று விக்கெட் கீப்பராக இடம் பெறுவார் என கருதப்படுகிறது. இந்திய அணி அடுத்த ஐந்து மாதங்களில் பத்து டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது.

வங்கதேசம், நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிராக இந்திய அணி தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இதனிடையே ரிஷப் பண்ட்டுக்கு காயம் ஏற்பட்டாலோ அல்லது அவர் தொடர்ந்து சில போட்டிகளில் ரன் எடுக்காமல் போனாலோ துருவ் ஜுரேல் அவரது இடத்தை பிடித்து விடுவார்.

இந்த விஷயம் ரிஷப் பண்ட்டுக்கு அதிக அழுத்தத்தை அளிக்கும். இவர்கள் தவிர ஸ்ரீதர் பாரத், இஷான் கிஷன் ஆகியோரும் இந்திய டெஸ்ட் அணியின் விக்கெட் கீப்பராக இடம் பெற வாய்ப்பு உள்ளது. எனவே, ரிஷப் பண்ட் முன்பு இருந்ததை போல இந்திய அணியில் அசைக்க முடியாத வீரராக இருக்கலாம் என நினைக்க முடியாது. இனி அவர் ஒவ்வொரு அடியையும் கவனமாக எடுத்து வைக்க வேண்டும். அவர் 2024 டி20 உலகக் கோப்பையில் ஓரளவு ரன் சேர்த்தாலும் அவரது பேட்டிங் கட்டுப்பாடு அற்று இருந்தது. பல மோசமான ஷாட்களை அடித்தார். இது போன்ற தவறுகளை டெஸ்ட் போட்டியில் செய்தால் அவரது இடம் பறிபோக வாய்ப்பு உள்ளது.

Story first published: Monday, September 2, 2024, 15:03 [IST]
Other articles published on Sep 2, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+