டெல்லி : வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய வீரர் ரியான் பராக் கையை கோணலாக வைத்து பந்து எறிந்த போது அதற்கு நடுவர் நோ பால் வழங்கியது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இந்திய கிரிக்கெட்டில் ரோகித் சர்மா, விராட் கோலி போன்ற பேட்ஸ்மேன்கள் பெரிய அளவில் பந்து வீசியதே கிடையாது.
இதனால் இந்திய அணி பந்துவீச்சில் பெரிய அளவில் பாதிக்கப்பட்டிருக்கிறது. இந்த சூழ்நிலையில் கௌதம் கம்பீர் பயிற்சியாளராக பதவியேற்ற பின்பு பந்து வீசத் தெரிந்த பேட்ஸ்மேன்களுக்கு முன்னுரிமை வழங்கி வருகிறார்.

இதன் காரணமாக தற்போது வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் சாம்சன் தவிர மற்ற பத்து வீரர்களுக்குமே பந்து வீச தெரியும். இந்த நிலையில் டி20 கிரிக்கெட்டில் வித்தியாசமான முறையில் செயல்பட்டால் மட்டுமே வெற்றி கிடைக்கிறது. இதன் காரணமாக பேட்ஸ்மேன்கள் எப்படி வித்தியாசமான ஷார்ட்களை ஆடி முயற்சி செய்கிறார்களோ அதை போல் பவுலர்களும் வித்யாசமான முறையில் பந்து வீசி விக்கெட்டுகளை எடுக்க முயற்சி செய்கின்றனர்.
அந்த வகையில் இந்திய அணியில் இடம் பிடித்திருக்கும் 22 வயது ஆன ரியான் பராக், மகமதுல்லாவுக்கு பந்து வீசும் போது மலிங்கா ஸ்டைலில் கையை சாய்வாக வைத்து வித்தியாசமான முறையில் சுழற்பந்தை வீசினார். ஆனால் இதற்கு நடுவர் உடனே நோபால் வழங்கினார். இந்த நிலையில் ரியான் பராக் பந்து வீசிய ஸ்டைல் தான் சர்ச்சையை ஏற்படுத்தி எதிராக இந்திய வீரர்கள் நினைத்தனர்.
ஆனால் ரியாபராக் பந்து வீசும் போது பேக் புட் நோ பாலை வீசி இருப்பது ரீப்ளேவில் தெரிய வந்தது. அது மட்டும் இல்லாமல் அவர் பந்து வீசிய விதமும் ஐசிசி விதிகளுக்கு உட்பட்டது கிடையாது என கிரிக்கெட் வல்லுநர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர். ஆனால் ரியான் பராக் பேக் புட் நோபால் வீசியதால் நடுவரிடமிருந்து தப்பித்து இருக்கலாம் .
வித்தியாசமான முறையில் செயல்படும்போது விதிகளுக்கு உட்பட்டு கவனமாக செயல்பட வேண்டும் என்றும் கிரிக்கெட் வல்லுநர்கள் அறிவுறுத்தி இருக்கிறார்கள்.இந்த 2வது டி20 போட்டியில் ரியான் பராக், பேட்டிங்கில் 6 பந்துகளில் 15 ரன்கள் விளாசினார். இதில் இரண்டு சிக்சர்கள் அடங்கும்.