Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சிஎஸ்கே கேப்டனை மறக்கலை.. இந்திய அணியில் பெரிய வாய்ப்பு காத்திருக்கு.. பிசிசிஐ அதிரடி திட்டம்

கான்பூர்: இன்னும் சில தினங்களில் துவங்க உள்ள வங்கதேச அணிக்கு எதிரான டி20 தொடரில் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. அது குறித்து கடுமையான விமர்சனங்கள் எழுந்து இருந்தது. இந்தியாவுக்கு ஆசிய விளையாட்டில் தங்கப்பதக்கம் வென்று கொடுத்த கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு எந்த அணியிலும் நிரந்தரமாக இடம் அளிக்கப்படவில்லை என பலரும் சுட்டிக் காட்டினர்.

இந்த நிலையில் அவரை முழுமையாக கைவிடவில்லை, அவருக்காக மிகப்பெரிய திட்டம் ஒன்றை பிசிசிஐ வைத்துள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது. தற்போது வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி முடித்துள்ள இந்திய அணி, அடுத்து வங்கதேச அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. அந்தத் தொடருக்கான அணியில் எந்த டெஸ்ட் அணி வீரரும் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ind vs ban india ruturaj gaikwad

ஏனெனில், இந்திய அணி இன்னும் சில வாரங்களில் நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அதன் பின் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இவை அனைத்தும் முக்கியமான தொடர்களாகும். அதிலும், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ருதுராஜ் கெய்க்வாட்டை மாற்று துவக்க வீரராக தேர்வு செய்ய தேர்வுக் குழுவினர் திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதன் காரணமாகவே அவர் உள்ளூர் டெஸ்ட் போட்டிகளில் விளையாட அறிவுறுத்தப்பட்டு இருக்கிறார். தற்போது அவர் இரானி கோப்பை போட்டியில் ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணியின் கேப்டனாக விளையாடி வருகிறார். இந்த போட்டி முடிந்த பின் அவர் மீண்டும் உள்ளூர் தொடரான ரஞ்சி டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறார். நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கும் அவர் தேர்வு செய்யப்பட மாட்டார் என கூறப்படுகிறது.

மாற்று துவக்க வீரராக ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கு ருதுராஜ் கெய்க்வாட்டை தேர்வு செய்யப் போவது உறுதி என்றால் அவரை ஏன் வங்கதேச அணிக்கான டெஸ்ட் தொடரில் மாற்று துவக்க வீரராக தேர்வு செய்யவில்லை? நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் ஏன் தேர்வு செய்யப் போவதில்லை? என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது.

அது குறித்து பிசிசிஐ வட்டாரத்தில் விசாரித்த போது, ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ருதுராஜ் கெய்க்வாட் களம் இறங்கும் பட்சத்தில் அவருக்கு அதிக போட்டி அனுபவம் இருக்க வேண்டும். தற்போது அவரை வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும், நியூசிலாந்து டெஸ்ட் தொடரிலும் மாற்று வீரராக தேர்வு செய்தால் அவர் போட்டியில் விளையாடி இருக்க மாட்டார். அதனால், அதே சமயம் அவர் இந்த காலகட்டத்தில் உள்ளூர் டெஸ்ட் போட்டிகளில் விளையாடினால் அவர் தொடர்ந்து ஃபார்மில் இருக்க அந்த அனுபவம் உதவும். எனவே, தொலைநோக்கு பார்வையுடன் ருதுராஜ் உள்ளூர் போட்டிகளில் ஆட வைக்கப்பட்டிருக்கிறார் என்கின்றனர்.

Story first published: Tuesday, October 1, 2024, 18:55 [IST]
Other articles published on Oct 1, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+