Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சஞ்சு சாம்சனின் வீக்னஸ்.. தயாராக நிற்கும் ரிங்கு சிங்.. 2 மாற்றங்களை தைரியமாக செய்வாரா கம்பீர்?

துபாய்: இந்திய டி20 கிரிக்கெட் அணியில் நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சனுக்காக ஃபினிஷரான ரிங்கு சிங் மற்றும் ஜித்தேஷ் சர்மாவிற்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு வருவதாக விவாதங்கள் எழுந்துள்ளன. ஏனென்றால் சஞ்சு சாம்சன் தொடக்க வீரராக சிறப்பாக ஆடி வந்த நிலையில், திடீரென சுப்மன் கில்லின் எழுச்சி காரணமாக அவரை பெஞ்ச் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதனால் சஞ்சு சாம்சன் நம்பர் 5 வரிசையில் களமிறங்கி வருகிறார்.

ஆசியக் கோப்பைத் தொடரின் சூப்பர் 4 சுற்றில் வங்கதேச அணியை எதிர்த்து இந்திய அணி விளையாட உள்ளது. டி20 கிரிக்கெட்டில் இந்திய அணி நம்பர் 1 இடத்தில் இருந்தாலும், வங்கதேச அணி எப்போதும் கடந்த சில ஆண்டுகளாக சவால் அளித்து வந்துள்ளது. அதேபோல் அந்த அணி வீரர்களின் நாகினி டான்ஸ் சர்ச்சைக்கு பின், இரு அணிகளின் ரசிகர்களும் சோசியல் மீடியாவில் மோதி வருகின்றனர்.

IND vs BAN

இந்த நிலையில் இலங்கை அணியை வீழ்த்திய வலிமையோடு வங்கதேச அணி இந்திய அணியை எதிர்த்து விளையாட உள்ளது. இந்திய அணியின் பேட்டிங் வரிசையை பொறுத்தவரை வலிமையாக காணப்பட்டாலும், நம்பர் 5ல் சஞ்சு சாம்சன் களமிறங்குவது பின்னடைவாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் தொடக்க வீரராக ஆடி வந்த சஞ்சு சாம்சன், சுப்மன் கில்லின் எழுச்சியால் பெஞ்சில் அமர வேண்டிய சூழல் ஏற்பட்டது.

ஆனால் சஞ்சு சாம்சனின் அபாரமான ஃபார்ம் காரணமாக அவருக்கு மிடில் ஆர்டரில் ஆட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஓமன் அணிக்கு எதிரான போட்டியில் சஞ்சு சாம்சன் சிறப்பாக ஆடி இருந்தாலும், பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் கொஞ்சம் விக்கெட்டுகள் சரிந்தவுடன் அழுத்தத்தை விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினார்.

அதுமட்டுமல்லாமல் துணைப் பயிற்சியாளர் ரியான் பேசும் போதும், சஞ்சு சாம்சன் விரைவில் மிடில் ஆர்டரில் எப்படி விளையாட வேண்டும் என்பதை புரிந்து கொள்வார் என்று தெரிவித்தார். சஞ்சு சாம்சனை தயார் செய்வதற்கு பதிலாக ரிங்கு சிங் அல்லது மாற்று விக்கெட் கீப்பரான ஜித்தேஷ் சர்மா ஆகியோருக்கு இந்திய அணி நிர்வாகம் பிளேயிங் லெவனில் வாய்ப்பளிக்கலாம் என்று கருதப்படுகிறது.

அதேபோல் ரிங்கு சிங் நீண்ட காலமாகவே டி20 கிரிக்கெட்டில் மிடில் ஆர்டரில் விளையாடி வருவதோடு, ஃபினிஷராகவும் செயல்பட்டு வருகிறார். அப்படியில்லை என்றாலும், சுப்மன் கில்லுக்காக சஞ்சு சாம்சனை மிடில் ஆர்டரில் களமிறக்குவதற்கு பதிலாக, நல்ல மிடில் ஆர்டர் விக்கெட் கீப்பரை கம்பீர் தேர்வு செய்ய வேண்டும் என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன.

Story first published: Wednesday, September 24, 2025, 15:16 [IST]
Other articles published on Sep 24, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+