Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எவ்வளவு திமிர்.. சன் கிளாஸுடன் பேட்டிங் செய்ய வந்த ஸ்ரேயாஸ் ஐயர்.. டக் அவுட்டில் வீழ்த்தி பதிலடி!

அனந்தபூர்: துலீப் டிராபி தொடரில் இந்தியா ஏ அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் சன் கிளாஸ் அணிந்து பேட்டிங் செய்ய களமிறங்கியது ரசிகர்களிடையே கிண்டல் செய்யப்பட்டு வருகிறது. சன் கிளாஸ் அணிந்து திமிருடன் களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர், 7 பந்துகளை எதிர்கொண்டு டக் அவுட்டாகி வெளியேறினார்.

கடந்த முறை நியூசிலாந்து அணி சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது இந்திய டெஸ்ட் அணியில் ஸ்ரேயாஸ் ஐயர் தேர்வு செய்யப்பட்டார். அறிமுக தொடரிலேயே சிறப்பாக ஆடிய ஸ்ரேயாஸ் ஐயர், 2 சதங்களை விளாசி அசத்தினார். இதன் மூலமாக ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணியில் ஸ்ரேயாஸ் ஐயர் மிடில் ஆர்டரில் நம்பிக்கைக்குரிய வீரராக பார்க்கப்பட்டார்.

ind vs ban india shreyas iyer

ஆனால் தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். அதன்பின் ரஞ்சி டிராபி தொடரில் விளையாட அறிவுறுத்தப்பட்ட நிலையில், இங்கிலாந்து தொடரிலும் மோசமான ஆட்டத்தையே வெளிப்படுத்தினார். இதனால் இந்திய அணி நிர்வாகம் ஸ்ரேயாஸ் ஐயர் மீதான நம்பிக்கையை இழந்தது.

ஒரு கட்டத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்க மறுத்து வந்த நிலையில், இந்திய அணியில் சர்ஃபராஸ் கான், துருவ் ஜுரெல் உள்ளிட்ட வீரர்களுக்கு இந்திய அணியில் வாய்ப்பு அளிக்கப்பட்டது. அதனை பயன்படுத்தி கொண்ட இருவரும், வங்கதேசம் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

ஆனால் ஸ்ரேயாஸ் ஐயரின் பெயர் பரிசீலிக்கப்படவே இல்லை. இருந்தாலும் அவருக்கு துலீப் டிராபியில் விளையாட வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் ஸ்ரேயாஸ் ஐயர் துலீப் டிராபி தொடரில் கிடைத்த வாய்ப்புக்கு முக்கியத்துவம் அளித்ததாக தெரியவில்லை. இந்தியா டி அணியின் கேப்டனாக விளையாடி வரும் ஸ்ரேயாஸ் ஐயர், கொஞ்சம் கூட பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை.

முதல் சுற்று போட்டியிலேயே முதல் இன்னிங்ஸில் 9 ரன்களிலும், 2வது இன்னிங்ஸில் அதிரடியாக விளையாடி 44 பந்துகளில் 54 ரன்கள் எடுத்தார். இருந்தாலும் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்தியா டி அணி தோல்வியை சந்தித்தது. இதனை 2வது சுற்று போட்டியில் மாற்றுவார் என்று பார்க்கப்பட்ட போது, ஸ்ரேயாஸ் ஐயர் டக் அவுட்டாகி வெளியேறியது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதுமட்டுமல்லாமல் நம்பர் 3 வரிசையில் பேட்டிங் செய்ய ஸ்ரேயாஸ் ஐயர் களமிறங்கிய போது, சன் கிளாஸ் அணிந்து வந்திருக்கிறார். ஏற்கனவே அவருக்கு இடதுகை பவுலர்களை எதிர்கொள்வதில் சிக்கல் இருக்கும் சூழலில், கலீல் அஹ்மத் பவுலிங்கில் பவுண்டரி அடிக்க முயன்று நேராக மிட் ஆன் திசையில் நின்ற ஃபீல்டரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். சன் கிளாஸுடன் பேட்டிங் செய்து ஸ்ரேயாஸ் ஐயர் ஆட்டமிழந்த வீடியோ சோசியல் மீடியாவில் ட்ரெண்டான நிலையில், ஸ்ரேயாஸ் ஐயருக்கு திமிர் அதிகம் என்று ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

Story first published: Friday, September 13, 2024, 14:31 [IST]
Other articles published on Sep 13, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+