Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs BAN: வங்கதேசத்துக்கு மிகப் பெரிய இழப்பு.. கேப்டனே இல்லை.. இந்தியாவுக்கு டாசில் அடிச்ச லக்

துபாய்:ஆசிய கோப்பை சூப்பர் ஃபோர் சுற்றி இந்திய அணி என்று வங்கதேசத்தை எதிர்கொள்கிறது இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று விட முடியும்.
அதேசமயம் வங்கதேச அணி தோல்வியை தழுவினால் அது பாகிஸ்தான் மற்றும் இலங்கை போன்ற அணிகளுக்கு சாதகமான முடிவாக அமையும்.

இந்த நிலையில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இரு அணிகளும் 18 முறை மோதியுள்ளன. இதில் இந்தியா 17 முறையும், வங்கதேச அணி ஒரு முறையும் வென்றிருக்கிறது. துபாயில் நடைபெறும் இன்றைய சூப்பர் ஃபோர் சுற்று ஆட்டத்தில் டாஸ் வென்ற வங்கதேச அணி கேப்டன் ஜேக்கர் அலி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

Ind vs Ban Super 4

அந்த அணியில் கேப்டனும் அதிக ரன்கள் அடித்த வீரருமான லிட்டன் டாஸ் இன்றைய போட்டியில் காயம் காரணமாக விளையாட மாட்டார் என்று அவர் அறிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், நாங்கள் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்கின்றோம். இந்த முக்கியமான ஆட்டத்தில் எங்களுடைய கேப்டன் லிட்டன் டாஸ் காயம் ஏற்பட்டிருக்கிறது.

எனினும் இந்த வாய்ப்பு எனக்கு கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது. உலகில் மிகச் சிறந்த அணியை எதிர்கொள்கிறோம். இந்த போட்டியில் மிகுந்த எதிர்பார்ப்புடன் விளையாடுகின்றோம். இந்த ஆட்டத்தில் நிச்சயம் எங்களுடைய சிறந்த செயல்பாட்டை வெளிப்படுத்துவோம். முதலில் பந்து வீசுவதால், இந்திய அணியை குறைந்த இலக்கில் கட்டுப்படுத்த முயற்சி செய்வோம்.

அதன் பின் அந்த இலக்கை நாங்கள் துரத்துவோம் என நம்புகின்றோம். ஆடுகளம் நன்றாக இருப்பதால் இரண்டாவது முறையாக பேட்டிங் செய்யும்போது பெரிய மாற்றம் இருக்காது என நினைக்கின்றேன். எங்கள் அணியில் இன்று நான்கு மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கிறது என்று கூறினார்.

இதனை தொடர்ந்து பேசிய இந்திய அணி கேப்டன் சூரியகுமார் யாதவ், நாங்கள் பேட்டிங் செய்வதில் மகிழ்ச்சி அடைகின்றோம். ஏனென்றால் கடந்த நான்கு ஐந்து போட்டிகளில் நாங்கள் தேவையான அனைத்தையும் செய்து விட்டோம். எனவே முதலில் பேட்டிங் செய்வது மகிழ்ச்சி அளிக்கிறது. நாங்கள் செய்யும் விஷயத்தை தொடர்ந்து செய்ய வேண்டும் என நினைக்கின்றேன்.

அப்படி செய்தால் நமக்கு தேவையான முடிவுகள் நிச்சயம் கிடைக்கும். எங்கள் அணி வீரர்கள் அனைவரும் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார்கள். நாங்கள் கடந்த ஆட்டத்தில் சில காட்சிகளை தவற விட்டோம். அதற்கு உரிய பயிற்சி எடுத்தோம். எங்கள் அணியில் எந்த மாற்றமும் இல்லை. இன்று துபாயில் வானிலை மிகவும் நன்றாகவே இருக்கிறது என்று சூரிய குமார் தெரிவித்துள்ளார்.

Story first published: Wednesday, September 24, 2025, 19:33 [IST]
Other articles published on Sep 24, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+