Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs BAN - சூர்யகுமார் இனி தேவையில்ல.. முக்கிய கட்டத்தில் காலை வாரிய கேப்டன்

மும்பை : வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி கேப்டன் சூரியகுமார் யாதவ் முக்கிய கட்டத்தில் 8 ரன்களின் வெளியேறி இருப்பது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்திய அணி ஒன்றுக்கு 0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இரண்டாவது டி20 போட்டி டெல்லியில் நடைபெற்றது. டெல்லி கோட்லா மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் சஞ்சு சாம்சன், அபிஷேக் ஷர்மா ஆகியோர் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர்.

ind vs ban nitish reddy suryakumar yadav hardik pandya

சஞ்சு சாம்சன் 10 ரன்களில் வெளியேற, அபிஷேக் ஷர்மா 15 ரன்கள் ஆட்டம் இழந்தால், இதன் மூலம் இந்திய அணி 25 ரன்கள் சேர்ப்பதற்குள் இரண்டு விக்கெட்டுகளுக்கு இழந்து தடுமாறியது. இதனை அடுத்து மூன்றாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கேப்டன் சூரியகுமார், நிதிஷ்குமார் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முயன்றனர்.

சூரியகுமார் யாதவ், தனி ஆளாக நின்று இந்திய அணியை காப்பாற்றுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் 10 பந்துகளில் எட்டு ரன்கள் மட்டுமே அடித்தார். இதில் ஒரு பவுண்டரி மட்டுமே அடங்கும். சூரிய குமார் யாதவ் ஸ்ட்ரைக் ரேட் 80ஆக மட்டுமே இருந்தது. அணி கடினமான ஒரு காலகட்டத்தில் சிக்கிய போது சூரியகுமார் யாதவ் காப்பாற்றுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்து மீண்டும் ஏமாற்றம் அடைந்தனர்.

சூரியகுமார் யாதவ் நெருக்கடியான கட்டத்தில் எப்போதெல்லாம் களமிறங்குகிறாரோ, அப்போதெல்லாம் சரியாக விளையாடுவதில்லை என்ற விமர்சனமும் முன்வைக்கப்படுகிறது. இந்த சூழலில் சூர்யகுமார் காலை வாரிவிட்டாலும், இளம் வீரர் நிதிஷ்குமார் ரெட்டியும் ஜோடி சேர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

நிதிஷ்குமார் 34 பந்துகளில் 74 ரன்கள் விளாசினார். இதில் நான்கு பவுண்டரிகள், ஏழு சிக்ஸர்கள் அடங்கும். ரிங்கு சிங்கு 29 பந்துகளில் 53 ரன்கள் எடுக்க ஹர்திக் பாண்டியா 19 பந்து 32 ரன்கள் சேர்த்தார். இதன் மூலம் இந்திய அணி 14 ரன்கள் கூட தொடாது என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது 221 ரன்கள் குவித்தது.

Story first published: Wednesday, October 9, 2024, 21:53 [IST]
Other articles published on Oct 9, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+