Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs BAN - விராட் கோலியின் சாதனையை உடைக்க சூர்யகுமாருக்கு வாய்ப்பு.. வெறும் 39 ரன்கள் போதும்

டெல்லி : இந்தியா, வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது t20 போட்டி டெல்லியில் புதன்கிழமை இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது. 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்திய அணி ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த போட்டியில் வென்றால் இந்தியா தொடரை இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் கைப்பற்றி விடும்.

கில், ஜெய்ஸ்வால்,பும்ரா போன்ற ஸ்டார் வீரர்கள் இல்லாமல் இந்திய அணி முதல் டி20 போட்டிகள் வங்கதேசத்தில் அபாரமாக வீழ்த்தியது. இந்த நிலையில் அதே ஃபார்முடன் இந்தியா இரண்டாவது போட்டியில் விளையாடும் என தெரிகிறது. ஒருவேளை இந்தியா டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்தால் ரன் குவிப்புக்கு சாதகமான டெல்லி மைதானத்தில் 250 ரன்கள் மேல் அடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

ind vs ban suryakumar yadav hardik pandya

இந்த நிலையில் இந்திய அணி கேப்டன் சூரியகுமார் யாதவ் ஒரு மகத்தான சாதனையில் படைக்க வாய்ப்பு இருக்கிறது. சூரிய குமார் யாதவ் தற்போது 72 டி20 போட்டிகளில் இந்தியாவுக்காக விளையாடி 2462 அடித்திருக்கிறார். வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டிகளில் சூரியகுமார் யாதவ், 39 ரன்கள் அடித்தால் 2500 ரன்கள் என்ற மைல் கல்லை தொடுவார்.

இதன் மூலம் அதிவேகமாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 2500 ரன்கள் எடுத்த விராட் கோலியின் சாதனையை சூரிய குமார் சமன் செய்வார். ஏற்கனவே 2000 ரன்கள் அதிவேகமாக அடித்தவர்கள் பட்டியலில் விராட் கோலியும், சூரியகுமார் ஒரே இன்னிங்ஸில் எட்டி சாதனையை படைத்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.எனினும் சர்வதேச t20 கிரிக்கெட்டில் அதிவேகமாக 2500 ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் முதலிடத்தில் இருக்கிறார்.

இரண்டாவது இடத்தில் விராட் கோலியும், மூன்றாவது இடத்தில் முகமது ரிஸ்வானும், நான்காவது இடத்தில் ஆரோன் பிஞ்சும், ஐந்தாவது இடத்தில் மார்ட்டின் குப்த்திலும் இருக்கின்றனர். முதல் டி20 போட்டியில் விளையாடிய அதே வீரர்கள் தான் இரண்டாவது டி20 போட்டிகளில் விளையாடுவார்கள் என தெரிகிறது. இதில் வெற்றி பெற்றால் மூன்றாவது போட்டியில் மாற்றம் செய்யப்படலாம்.

Story first published: Tuesday, October 8, 2024, 22:24 [IST]
Other articles published on Oct 8, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+