For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சஞ்சு சாம்சனுக்கு புதிய பொறுப்பு..மாயங் யாதவ் அறிமுகம்.. இந்திய டி20 அணி கேப்டன் சூர்யகுமார் கருத்து

மும்பை : இந்தியா வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி ஞாயிற்றுக்கிழமை மாலை 7 மணிக்கு தொடங்குகிறது. இந்த போட்டியில் சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி வீரர்கள் களமிறங்குகிறார்கள். கில், ஜெயஸ்வால், பும்ரா போன்ற வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஹர்திக் பாண்டியா, சஞ்சு சாம்சன் போன்ற வீரர்கள் விளையாடுகிறார்கள். இந்த போட்டி குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய டி20 கேப்டன் சூரியகுமார் யாதவ் தொடக்க வீரராக சஞ்சு சாம்சன் விளையாடப் போவதாக அறிவித்துள்ளார்.

ind vs ban t20 cricket india vs bangladesh suryakumar yadav

இதுகுறித்து பேசிய அவர் அபிஷேக் ஷர்மா தொடக்க வீரராக அணியின் உள்ள நிலையில் சாம்சன் அவருக்கு ஜோடியாக களமிறங்க போவதாக தெரிவித்துள்ளார். பந்துவீச்சை பொறுத்தவரை மாயங் யாதவ் அணிக்கு மிகப்பெரிய பலமாக இருப்பார். அவர் அதிவேகமாக பந்து வீசிய கூடியவர். மாயங் யாதவ், இதுவரை நான் வலை பயிற்சி கூட எதிர்கொண்டதில்லை.

அணியில் மிகப்பெரிய ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்தக்கூடிய வீரராக நான் அவரை கருதுகிறேன். வங்கதேச தொடரில் அவர் சிறப்பாக விளையாடுவார் என்று நம்புகிறேன். இந்திய அணி தற்போது நிறைய கிரிக்கெட் தொடர்களின் விளையாடுகிறது. இளம் வீரர்கள் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் அதிக அளவு விளையாடுகிறார்கள்.

இதனால் மாயங் யாதவ் பத்திரமாக தான் கையாள வேண்டும் என்று கூறினார். ஆடுகளம் குறித்து பேசிய சூரியகுமார் யாதவ், ஆடுகளம் ரன் குவிப்புக்கு சாதகமாக இருக்கும் என தெரிகிறது.

போட்டிக்கு பயன்படுத்தப்படும் ஆடுகளத்திற்கு அருகில் உள்ள பிட்ச்சில் நாங்கள் பேட்டிங் செய்தோம். அதில் ஆடுகளம் தோய்வாக இருப்பது போல் எனக்கு தெரியவில்லை. டி20 போட்டிகளுக்கு ஏற்ற வகையிலான ஆடுகளம் அமைக்கப்பட்டிருக்கிறது என நினைக்கிறேன். முதல் டி20 போட்டி மிகவும் சுவாரசியமாக அமையும் என நினைக்கின்றேன். புதிய மைதானம் என்பதால் மூன்று நாட்களாக இங்கு பயிற்சி செய்து ஆடுகளம் தன்மை காற்றின் வேகம் காற்றின் திசை என்று குறித்து எல்லாம் கண்காணித்தோம்.

பயிற்சியில் ஒவ்வொருவரும் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார்கள். போட்டியை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கிறோம். எங்களுடைய பேட்ஸ்மேன்கள் ஒரு சில ஓவர்கள் வீசினால், அது நன்றாக இருக்கும். தற்போது எங்கள் அணியில் பந்து வீசத் தெரியாத வீரர்கள் யாரும் இல்லை என்று நினைக்கின்றேன். குறிப்பாக ரியான் பராக் 4 ஓவர்களை வீசுவதன் மூலம் போட்டியில் உள்ள நெருக்கடி குறையும் என்றும் சூரிய குமார் யாதவ் கூறியுள்ளார்.

Story first published: Saturday, October 5, 2024, 21:51 [IST]
Other articles published on Oct 5, 2024
English summary
Ind vs Ban - Suryakumar yadav reveals sanju samson will be open the innings சஞ்சு சாம்சனுக்கு புதிய பொறுப்பு..மாயங் யாதவ் அறிமுகம்.. இந்திய டி20 அணி கேப்டன் சூர்யகுமார் கருத்து
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+