Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs BAN: சூர்யகுமார் மீண்டும் தடுமாற்றம்.. 18 இன்னிங்சில் 10 முறை ஒன்றை இலக்கத்தில் அவுட்

துபாய்: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி தோல்வியை தழுவாமல் விளையாடுகிறது. இன்னும் சொல்லப்போனால் டி20 உலக கோப்பைக்கு பிறகு இந்திய அணியின் கேப்டனாக சூரியகுமார் யாதவ் தலைமையேற்ற பிறகு இந்திய அணி தொடர்ந்து வெற்றிகளை பெற்று வருகிறது.

சூரியகுமார் யாதவ் வெற்றி சதவீதம் கேப்டனாக 85 சதவீதத்திற்கு மேல் இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் வெறும் நான்கு போட்டிகளில் மட்டும் தான் அவர் கேப்டனாக இருந்த நிலையில் இந்தியா தோல்வியை தழுவி இருக்கிறது. அப்படி ஒரு கேப்டனாக பிரம்மாண்ட ரெரக்கார்டை வைத்திருக்கிறார்.

Suryakumar yadav

ஆனால் சூரிய குமார் யாதவ் பேட்ஸ்மேன் ஆக தடுமாறி வருகிறார். கேப்டன் பொறுப்பு காரணமாக அது அவருடைய பேட்டிங்கை பாதிக்க வைத்திருப்பதாக ரசிகர்கள் குறிப்பிட்டுள்ளனர். குறிப்பாக சூரியகுமார் யாதவும் கடைசியாக விளையாடிய 18 இன்னிங்சில் வெறும் இரண்டு முறை தான் அரைசதம் அடித்துள்ளார்.

கடைசியாக அவர் அரைசதம் அடித்து கிட்டத்தட்ட ஒரு ஆண்டு ஆகப் போகிறது. அக்டோபர் 12ஆம் தேதி 2024 ஆம் ஆண்டு வங்கதேசத்துக்கு எதிராக சூரியகுமார் யாதவ் 75 ரன்கள் அடித்திருந்தார். மேலும் இந்த 18 இன்னிங்ஸில் சூரியகுமார் யாதவும் 10 முறை ஒற்றை இலக்கம் ரன்களில் ஆட்டம் இழந்து இருக்கிறார். 13 முறை 20 ரன்களை கூட அவர் தொடவில்லை.

இது பேட்டிங்கில் அவர் தடுமாறுவதையே காட்டி இருக்கிறது. அதுவும் நடப்பாண்டில் சூரிய குமார் யாதவ் மிகவும் மோசமாக விளையாடி வருகிறார். 9 இன்னிங்ஸில் மொத்தமாகவே அவர் 87 ரன்கள் தான் அடித்திருக்கிறார். இதில் அவருடைய சராசரி வெறும் 12 என்று அளவிலே இருக்கிறது. சூரியகுமார் யாதவ் கேப்டனாக மட்டுமில்லாமல் இருந்தால் இந்நேரம் அணியை விட்டு நீக்கப்பட்டு இருப்பார்.

அந்த அளவிற்கு பேட்டிங்கில் அவர் மோசம் காட்டி வருகிறார். பாகிஸ்தானுக்கு எதிரான லீக் சுற்றில் சூரிய குமார் தனது பழைய பார்மை காட்டினார். அதில் அவர் 37 பந்துகளில் 47 ரன்கள் சேர்த்தார். இதுல், ஐந்து பவுண்டரி ஒரு சிக்சர் அடங்கும். இதனால் சூரிய குமார் தன்னுடைய பேட்டிங்கில் கவனம் செலுத்த வேண்டிய நெருக்கடிக்கு தள்ளப்பட்டு இருக்கிறார். இதனால் அணியை விட்டு நீக்கப்படுவாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Story first published: Wednesday, September 24, 2025, 21:27 [IST]
Other articles published on Sep 24, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+