Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs BAN - 207 ஸ்ட்ரைக் ரேட்டில் துவம்சம் செய்த சூர்யகுமார்.. கதையை முடித்த சிஎஸ்கே சிங்கம்

குவாலியர் : வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி கேப்டன் சூரியகுமார் யாதவ் பேட்டிங்கில் மிரட்டி ரன்களை குவித்தார். டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. வங்கதேசத்தை 127 ரன்களில் சுருட்டியது. இதனை அடுத்து 128 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது.

முதல் விக்கெட்டுக்கு அபிஷேக் ஷர்மா, சஞ்சு சாம்சன் ஜோடி அபாரமாக ரன்களை சேர்த்தது இரண்டு ஓவர்களில் எல்லாம் 25 ரன்களை இந்த ஜோடி சேர்த்த நிலையில் அபிஷேக் ஷர்மா 16 ரன்களில் வெளியேறினார்.இதனை அடுத்து இரண்டாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த சூரியகுமார் யாதவ், சஞ்சு சாம்சன் ஜோடி வங்கதேச பந்துவீச்சை மைதானத்தில் நான்கு பக்கத்திற்கும் சிதறடித்தனர்.

ind vs ban suryakumar yadav t20 cricket india vs bangladesh

குறிப்பாக சூரியகுமார் யாதவ் தன்னுடைய வழக்கமான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பவுலர் ஆப் சைடில் பந்து வீசினாலும் அதனை திருப்பி லெஃப்ட் சைடில், பைன் லேக்கில் தொடர்ந்து வரிசையாக சிக்சர் அடித்தார். மூன்று சிக்சர், இரண்டு பவுண்டரி பறக்கவிட்ட சூரியகுமார் யாதவ் 14 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்தார். இதில் அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 207 என்ற அளவில் இருந்தது.

சூரியகுமார் யாதவ், தனி ஆளாக நின்று ஆட்டத்தை முடித்து விடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. அப்போது, சிஎஸ்கே வீரர் முஸ்தாபிசுர் ரஹ்மானின் பந்துவீச்சில் ஜாக்கர் அலியிடம் கேட்ச் ஆனார். இதை அடுத்து இந்திய அணி 65 ரன்கள் எடுத்த போது 2வது விக்கெட்டை இழந்தது. சிஎஸ்கே வீரர் முஸ்தஃபிசுர் ரஹ்மான் மட்டும் இல்லை என்றால் சூரிய குமார் போட்டியை தனியாக நின்று முடித்திருப்பார்.

சூரியகுமார் யாதவ் இந்த இன்னிங்ஸில் மூன்று சிக்சர் அடித்திருக்கிறார். இதன் மூலம் அதிக சிக்ஸர்கள் அடித்தவர்கள் பட்டியலில் சூரியகுமார் யாதவ் தற்போது நான்காம் இடத்தை பிடித்திருக்கிறார். 137 சிக்ஸர்களுடன் ஐந்தாவது இடத்தில் இருந்த நிலையில் தற்போது சூரியகுமார் யாதவ் இன்றைய ஆட்டத்தில் மூன்று சிக்சர்கள் அடித்ததுடன் 139 சிக்சருடன் நான்காம் இடத்தில் உள்ளார்.

முதல் இடத்தில் ரோகித் சர்மா 205 சிக்ஸர்ருடன் இருக்கிறார். மார்டின் குப்தில் 173 சிக்சர் உடன் இரண்டாவது இடத்திலும், நிக்கோலஸ் பூரான் 144 சிக்ஸர் உடன் மூன்றாவது இடத்திலும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Sunday, October 6, 2024, 22:12 [IST]
Other articles published on Oct 6, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+