மும்பை: இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் மோத உள்ளன. தற்போது நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி அக்டோபர் 1 அன்று முடிவுக்கு வரும். அதன் பின் ஐந்து நாட்கள் இடைவெளியில் டி20 தொடர் துவங்கும்.
மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரின் முதல் போட்டி அக்டோபர் 6 அன்று நடைபெறும். இந்த தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. மேலும், இந்த தொடருக்கான போட்டி அட்டவணை, தொலைக்காட்சி மற்றும் இணைய ஒளிபரப்பு ஆகியவை குறித்த விவரங்கள் இங்கே அளிக்கப்பட்டு உள்ளது.

வங்கதேச அணிக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்க உள்ள இந்திய அணி விவரம்:
சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ரிங்கு சிங், ஹர்திக் பாண்டியா, ரியான் பராக், நிதிஷ் குமார் ரெட்டி, சிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், வருண் சக்கரவர்த்தி, ஜிதேஷ் சர்மா. (விக்கெட் கீப்பர்), அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா, மயங்க் யாதவ்.
இந்தியா மற்றும் வங்கதேச டி20 தொடர் அட்டவணை:
முதல் போட்டி - அக்டோபர் 6, 2024 - மாதவராவ் சிந்தியா ஸ்டேடியம், குவாலியர்
2வது போட்டி - அக்டோபர் 9, 2024 - அருண் ஜெட்லி ஸ்டேடியம், டெல்லி
3வது போட்டி - அக்டோபர் 12, 2024 - ராஜீவ் காந்தி சர்வதேச மைதானம், ஹைதராபாத்
இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான டி20 போட்டிகள் எத்தனை மணிக்கு துவங்கும்?
இந்த தொடரின் மூன்று போட்டிகளும் மேற்கூறிய தேதிகளில் இரவு 7 மணிக்கு துவங்கி நடைபெறும். 6.30 மணிக்கு டாஸ் போடப்படும்.
இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதும் டி20 தொடரின் நேரடி ஒளிபரப்பை எந்த தொலைக்காட்சி சேனலில் பார்ப்பது?
இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் நேரடி ஒளிபரப்பை ஸ்போர்ட்ஸ் 18 (Sports 18) மற்றும் கலர்ஸ் சினிபிளக்ஸ் (Colors Cineplex) சேனல்களில் பார்க்கலாம்.
இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதும் டி20 தொடரின் நேரடி ஒளிபரப்பை எந்த மொபைல் செயலி அல்லது இணையதளத்தில் பார்ப்பது?
இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் நேரடி ஒளிபரப்பை ஸ்ட்ரீமிங் முறையில் ஜியோசினிமா மொபைல் செயலி அல்லது இணையதளத்தில் பார்க்கலாம்.