Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs BAN -முதல் டி20 போட்டியில் இந்தியாவின் பிளேயிங் XI? 155 கிமீ. பந்துவீசும் வீரருக்கு வாய்ப்பு

குவாலியர் : இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இதில் இந்திய அணி இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் தொடரை முழுமையாக கைப்பற்றிய நிலையில், தற்போது மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற இருக்கிறது.

இதில் முதல் டி20 போட்டி ஞாயிற்றுக்கிழமை அக்டோபர் ஆறாம் தேதி குவாலியர் நகரில் இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. இதை தொடர்ந்து ஒன்பதாம் தேதி டெல்லியில் இரண்டாவது டி20 போட்டியும், சனிக்கிழமை அக்டோபர் 12ஆம் தேதி ஹைதராபாத்தில் மூன்றாவது டி20 போட்டியும் நடைபெற இருக்கிறது.

ind vs ban t20 cricket india vs bangladesh suryakumar yadav

இந்தப் போட்டியில் கில், பும்ரா, அக்சர் பட்டேல் போன்ற ஸ்டார் வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டிருக்கிறது. இந்த சூழலில் சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணியில் பிளேயிங் லெவன் எவ்வாறு இருக்கும் என்பதை தற்போது பார்க்கலாம். இந்த தொடருக்காக பிசிசிஐ அறிவித்த அணியில் தொடக்க வீரராக அபிஷேக் ஷர்மா மட்டும்தான் இருக்கிறார்.இதனால் அவர் பேட்டிங்கில் தொடக்க வீரராக இருப்பார்.

அவருக்கு ஜோடியாக சஞ்சு சாம்சன் ஓப்பனிங்கில் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணிக்காக நடு வரிசையில் சஞ்சு சாம்சன் களமிறங்கினாலும், ஐபிஎல் தொடரில் தொடக்க வீரராக தான் அவர் அதிரடி காட்டி வந்தார். இதனால் வங்கதேசத்துக்கு எதிராக அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் ஜோடி களமிறங்க கூடும். மூன்றாவது வீரராக சூரியகுமார் யாதவ் களமிறங்குவார். நான்காவது வீரராக ரிங்கு சிங் அல்லது ரியான் பராக் விளையாட வாய்ப்பு இருக்கிறது.

ஐந்தாவது வீரராக ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவும், ஆறாவது வீரராக ஆல்ரவுண்டர் சிவம் துபேவும் விளையாடலாம். ஏழாவது வீரராக வாஷிங்டன் சுந்தர் இடம்பெறுவார். எட்டாவது வீரராக ரவி பிஸ்னாய்க்கு வாய்ப்பு வழங்கப்படும். இதனை தொடர்ந்து ஆர்ஸ்தீப் சிங், ஹர்சித் ராணா,மாயங் யாதவ் என்று மூன்று வேகப்பந்துவீச்சாளர்கள் விளையாட கூடும்.

இதில் மாயங் யாதவ் கடந்த ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்காக களம் இறங்கி மணிக்கு 155 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். எனினும் அவருக்கு காயம் ஏற்பட்டதால் தொடர்ந்து விளையாட முடியாமல் போனது. தற்போது மீண்டும் முழு உடல் தகுதியை மாயங் யாதவ் பெற்றிருப்பதால் அவர் பிளேயிங் லெவனில் இடம் பெற வாய்ப்பு இருக்கிறது.

இந்தியா பிளேயிங் XI உத்தேசம் : 1. அபிஷேக் சர்மா, 2, சஞ்சு சாம்சன், 3, சூர்யகுமார் யாதவ், 4, ரிங்கு சிங் /ரியான் பராக், 5, ஹர்திக் பாண்டியா, 6, சிவம் துபே, 7, வாசிங்டன் சுந்தர், 8, ரவி பிஸ்னாய், 9, ஆர்ஸ்தீப் சிங், 10, ஹர்சித் ரானா, 11, மாயங் யாதவ்,

Story first published: Saturday, October 5, 2024, 8:38 [IST]
Other articles published on Oct 5, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+