Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

காவ்யா மாறனுக்கும், கோயங்காவிற்கும் விழுந்த இடி! சம்பவம் செய்த சூர்யகுமார், கம்பீர்

மும்பை : ஐபிஎல் மெகா ஏலம் நடைபெறுவதற்கு முன்பு எந்தெந்த வீரர்களை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பது குறித்து ஒவ்வொரு அணிகளும் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் இந்திய அணிக்காக விளையாடாத வீரர்கள் 4 கோடி ரூபாய்க்கு தக்க வைத்துக்கொள்ளலாம் என்ற விதியை பி சி சி ஐ அறிவித்துள்ளது.

இதன் மூலம் பல அணிகள் தங்கள் அணியில் இடம் பெற்றிருக்கும் இளம் வீரர்களை வெறும் நான்கு கோடி ரூபாய் கொடுத்து தக்க வைத்துக் கொள்ளலாம் என்ற யோசனையில் இருந்தார்கள். அவர்களின் கனவில் தற்போது மிகப்பெரிய இடி ஒன்றை சூரியகுமார் யாதவும் மற்றும் கம்பீர் ஜோடி கொடுத்திருக்கிறது.

ind vs ban mayank yadav t20 cricket india vs bangladesh

அந்த வகையில் ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்காக மாயங் யாதவ் விளையாடி வருகிறார். இதேபோன்று சன்ரைசர்ஸ் அணிக்காக நிஷாந்த் ரெட்டி விளையாடி வருகிறார். இந்த இருவருமே இந்திய அணிக்காக இதுவரை ஒரு போட்டியில் விளையாட வில்லை. இந்த சூழலில் அக்டோபர் 30-ஆம் தேதிக்குள் இந்திய அணிக்கு அறிமுகமானால் அந்த வீரர்கள் ஏலத்தில் குறைந்தபட்ச விலையான நான்கு கோடி ரூபாய் கொடுத்து எடுக்க முடியாது என்று பிசிசிஐ அறிவித்திருந்தது.

இந்த நிலையில் சன்ரைசர்ஸ் அணியை சேர்ந்த அதிரடி ஆல் கவுண்டர் நிஷாந்த் சிங் ரெட்டி மற்றும் லக்னோ அணியை சேர்ந்த வேகப்பந்துவீச்சாளர் மாயன் யாதவ் ஆகியோரை இந்திய அணி இன்று அறிமுகம் செய்திருக்கிறது. இதன் மூலம் இந்த இரண்டு வீரர்களும் தற்போது இந்திய அணிக்காக விளையாடிய சர்வதேச வீரர்கள் என்று அறியப்படுவார்கள். இதன் காரணமாக மெகா ஏலத்திற்கு முன்பு இந்த வீரர்களை தக்க வைக்க வேண்டும் என்றால் குறைந்தபட்சம் 11 கோடி ரூபாய் கொடுக்க வேண்டியதாக இருக்கும்.

இது லக்னோ மற்றும் சன்ரைசர்ஸ் அணிக்கு மிகப்பெரிய தர்மசங்கத்தை கொடுத்திருக்கிறது. ஏற்கனவே பிசிசிஐ மீது கடும் கோபத்தில் காவியா மாறன் உள்ள நிலையில் தற்போது தங்கள் அணியின் முக்கிய இளம் வீரர் அணியில் விளையாட வேண்டுமென்றால் அதிக விலை கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறார். இதனால், இதை எதிர்த்து பிசிசிஐயிடம் இரண்டு அணிகளும் முறையிட போவதாக தெரிகிறது .

Story first published: Sunday, October 6, 2024, 19:16 [IST]
Other articles published on Oct 6, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+