Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

புஜாரா ஆடும் கடைசி டெஸ்ட் தொடர்??.. கைவிடாமல் இருக்க டிராவிட் செய்த அவசர விஷயம்.. என்ன ஆனது?

சட்டாகிராம்: வங்கதேச அணியுடனான டெஸ்ட் தொடரில் சட்டீஸ்வர் புஜாராவின் மீது ரசிகர்களின் கவனம் திரும்பியுள்ளது.

வங்கதேச அணியுடனான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி 2 - 1 என தோல்வியடைந்தது. இதனையடுத்து இரு அணிகளும் மோதும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரும் நடைபெறவுள்ளது.

முதல் டெஸ்ட் போட்டி வரும் டிசம்பர் 14ம் தேதி முதல் சட்டாகிராம் மைதானத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி சிக்கியுள்ளது.

 வங்கதேச டெஸ்ட் தொடர்

வங்கதேச டெஸ்ட் தொடர்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் முதல் சீசனில் இறுதிப்போட்டி வரை சென்ற இந்திய அணி, இந்த முறை இறுதிப்போட்டிக்கு செல்வதில் சிக்கல் உள்ளது. மீதமுள்ள 6 போட்டிகளிலும் வெற்றி கண்டால் மட்டுமே இறுதிப்போட்டிக்கு செல்ல முடியும். இதனால் அனைத்து வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். காயத்தில் இருந்த ரிஷப் பண்ட் கூட மீண்டும் அணிக்குள் வந்துள்ளார்.

புஜாராவுக்கு வந்த சிக்கல்

புஜாராவுக்கு வந்த சிக்கல்

இந்நிலையில் இந்த முக்கியமான போட்டியில் அனைவரின் கவனமும் புஜாராவின் மீது திரும்பியுள்ளது. கடந்த 2019ம் ஆண்டு முதல் ஒரு சதத்தை கூட அடிக்காமல் புஜாரா மோசமாக செயல்பட்டு வருகிறார். இதனால் சில போட்டிகளில் நீக்கப்பட்டார். இந்தாண்டில் இதுவரை 3 போட்டிகளில் மட்டுமே விளையாடி 187 ரன்களை மட்டுமே அடித்துள்ளார். அவருக்கு இந்த 2 போட்டிகள் தான் கடைசி வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.

காரணம் என்ன

காரணம் என்ன

இந்திய அணியின் மிடில் ஆர்டருக்கு தற்போது அபிமன்யூ ஈஸ்வரன் சிறப்பான ஃபார்முடன் என்ட்ரி கொடுத்துள்ளார். இவர் மட்டுமின்றி ஸ்ரேயாஸ் ஐயர் மிடில் ஆர்டரில் இருக்கிறார். சூர்யகுமார் யாதவையும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகப்படுத்த திட்டமிட்டு வருகின்றனர். எனவே தனது இடத்தை இன்னும் சில ஆண்டுகளுக்கு தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்றால் புஜாரா இந்த இரண்டு போட்டிகளிலும் சிறப்பாக விளையாடியே தீர வேண்டும் என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

டிராவிட் திட்டம்

டிராவிட் திட்டம்

இதனை நன்கு புரிந்துக்கொண்ட ராகுல் டிராவிட், புஜாரா போன்ற வீரரை இழக்கக்கூடாது என களத்தில் குதித்துள்ளார். இதற்காக அவரை மட்டும் தனியாக அழைத்துச்சென்று ஸ்பெஷல் பயிற்சிகளை கொடுத்து வருகிறார். அவரின் தவறுகள் என்னவென்பது குறித்து அறிவுரைகளையும் வழங்கி வருகிறார். இதற்கு பலன் கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Story first published: Monday, December 12, 2022, 11:28 [IST]
Other articles published on Dec 12, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+