For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஷமியை டீமில் எடுக்கக் கூடாது.. பிசிசிஐ போட்ட முட்டுக்கட்டை.. இளம் பவுலர்களுக்கு போன வாய்ப்பு

மும்பை: இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோத உள்ள முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அந்த அணியில் முகமது ஷமியின் பெயர் இடம் பெறவில்லை. அவர் காயம் தற்போது குணமாகிவிட்டதாக சொல்லப்படும் நிலையில் வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தேர்வு செய்யப்படவில்லை. இந்த முடிவை எடுத்தது பிசிசிஐ மற்றும் தேர்வுக் குழு தான் என தெரிய வந்துள்ளது.

2023 ஒருநாள் போட்டி உலகக்கோப்பை தொடரின் முடிவில் முகமது ஷமிக்கு கணுக்காலில் காயம் ஏற்பட்டிருந்தது. அதற்காக அவர் சிகிச்சை மேற்கொண்டு வந்தார். பின்னர் காயம் குணமானது. அதன் பின் அவர் பந்துவீச்சு பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். எனினும், உள்ளூர் போட்டிகளில் அவர் பங்கேற்கவில்லை. இந்த நிலையில் தான் வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் நெருங்கியது. இந்த தொடரில் முகமது ஷமி பங்கேற்க வாய்ப்பு உள்ளதாக தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் கூறி இருந்தார்.

ind vs ban india mohammed shami

ஆனால், கடைசி நேரத்தில் அவரது பெயர் இந்திய அணியில் சேர்க்கப்படவில்லை. அவர் அக்டோபர் 11 அன்று துவங்க உள்ள ரஞ்சி டிராபி முதல் தர டெஸ்ட் தொடரில் பெங்கால் அணிக்காக விளையாட உள்ளார். அதில் விளையாடி தனது உடற்தகுதியை நிரூபித்த பின்னரே இந்திய டெஸ்ட் அணியில் இடம் பெறுவார் என கூறப்படுகிறது.

முகமது ஷமியின் காயம் குணமாகி விட்டாலும், அவரை அவசரப்பட்டு சர்வதேச போட்டிகளில் விளையாட வைத்து பரிசோதனை செய்ய வேண்டாம் என்பதாலேயே பிசிசிஐ இந்த முடிவை எடுத்து உள்ளதாக கூறப்படுகிறது. அவர் முதலில் உள்ளூர் போட்டிகளில் விளையாடும் பட்சத்தில் அதிக அழுத்தம் இன்றி பந்து வீச முடியும். அவரால் முன்பு போல பந்து வீச முடிகிறதா? என்பதையும் அப்போது பரிசோதிக்கலாம்.

அவர் முழு உடற் தகுதியுடன் இருக்கிறார் என்பதை உறுதி செய்த பின்னரே பிசிசிஐ அவரை இந்திய அணியில் சேர்க்க உள்ளது. தற்காலிகமாக முகமது ஷமிக்கு பதிலாக ஆகாஷ் தீப் மற்றும் யாஷ் தயாள் ஆகிய வேகப் பந்துவீச்சாளர்கள் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பும்ரா மற்றும் முகமது சிராஜ் இந்திய அணியின் முதன்மை வேகப் பந்துவீச்சாளர்களாக செயல்பட உள்ளனர்.

அவர்களுடன் ஆகாஷ் தீப் மற்றும் யாஷ் தயாள் இணைந்து பந்து வீசக் கூடும். வங்கதேச டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் இரண்டு அல்லது மூன்று வேகப் பந்துவீச்சாளர்களை மட்டுமே பயன்படுத்தப்படுவார்கள் என்பதால் ஆகாஷ் தீப் அல்லது யாஷ் தயாள் ஆகிய இருவரில் ஒருவருக்கு மட்டுமே போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைக்கக்கூடும்.

வங்கதேச அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு பின் இந்திய அணி நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. மூன்று போட்டிகள் கொண்ட நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கு முகமது ஷமி தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்பு உள்ளது.

இந்தியா - வங்கதேச அணிகள் மோதும் டெஸ்ட் தொடரின் முதல் போட்டிக்கான இந்திய அணி விவரம் -

ரோஹித் சர்மா (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், விராட் கோலி, கே எல் ராகுல், சர்ஃபராஸ் கான், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), அஸ்வின், ரவீந்திர ஜடேஜா , அக்சர் படேல், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், ஆகாஷ் தீப், ஜஸ்பிரித் பும்ரா, யாஷ் தயாள்.

Story first published: Monday, September 9, 2024, 13:40 [IST]
Other articles published on Sep 9, 2024
English summary
IND vs BAN Test: The reason behind not selecting Mohammed Shami for the test squad revealed
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+