Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கொலவெறி பவுலிங்.. 2 வீரர்களை ஹாஸ்பிட்டலுக்கு அனுப்பி வைத்த இந்திய பவுலர்.. வங்கதேசம் ஷாக்!

Recommended Video

India vs Bangladesh 2nd Test | Shami rattles Liton Das, Naeem Hasan with bouncers

கொல்கத்தா : வங்கதேச பேட்ஸ்மேன்கள் இருவர் ஷமி பந்துவீச்சில் ஹெல்மட்டில் தாக்கப்பட்டனர்.

இருவரும் சிறிது நேரம் தாக்குப் பிடித்து ஆடினாலும், பின்னர் மருத்துவக் குழுவால் சோதனை செய்யப்பட்டு, மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

அந்த இரு வீரர்களுக்கும் பதிலாக ஆட இரண்டு மாற்று வீரர்களை அறிவித்து இருக்கிறது வங்கதேசம்.

ஷமி கொலவெறி

ஷமி கொலவெறி

ஷமி முதல் டெஸ்ட் போட்டியில் விக்கெட் வேட்டை நடத்தினார். இரண்டாவது டெஸ்ட் போட்டியில் "கொலவெறி"யுடன் பந்து வீசி ஹெல்மட்களை பதம் பார்த்து வருகிறார். அப்படி என்ன தான் நடந்தது?

வங்கதேசம் பேட்டிங்

வங்கதேசம் பேட்டிங்

முதல் பகல் - இரவு டெஸ்ட் போட்டியில் ஆடும் இந்தியா - வங்கதேசம் அணிகள் மோதிய இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வங்கதேசம் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.

விக்கெட் வேட்டை

விக்கெட் வேட்டை

துவக்கம் முதலே இந்திய வேகப் பந்துவீச்சாளர்கள் மிரட்டி வந்தனர். விக்கெட் வேட்டையாடினர். 20 ஓவர்களுக்குள் 6 விக்கெட்களை இழந்தது வங்கதேசம். சுழற் பந்துவீச்சாளர்களுக்கு வேலையே கொடுக்காமல் பார்த்துக் கொண்டனர் இந்திய பந்துவீச்சாளர்கள்.

லிட்டன் தாஸ் ஆட்டம்

லிட்டன் தாஸ் ஆட்டம்

20 ஓவர்களில் 64 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்து ஆடி வந்தது வங்கதேசம். 21வது ஓவரில் வங்கதேச அணியின் லிட்டன் தாஸ் பேட்டிங் செய்து வந்தார். ஷமி அந்த ஓவரை வீசினார்.

கடும் தாக்குதல்

கடும் தாக்குதல்

அந்த ஓவரின் 3வது பந்தில் ஷமி பந்துவீச்சில் ஹெல்மட்டில் கடுமையாக தாக்கப்பட்டார். தலையில் பந்தால் தாக்கப்பட்டால் முதற்கட்ட மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும் என்ற ஐசிசி விதிப்படி வங்கதேச அணியின் மருத்துவக் குழு அவரை பரிசோதனை செய்ததது.

லிட்டன் தாஸ் வெளியேறினார்

லிட்டன் தாஸ் வெளியேறினார்

அப்போது லிட்டன் தாஸ் தான் நிலையாக இருப்பதாக தெரிவித்தார். தொடர்ந்து ஆடினார். எனினும், இரு ஓவர்கள் கழித்து அவருக்கு தலையில் அசௌகரியம் எழுந்ததை அடுத்து அம்பயரிடம் கூறி விட்டு ரிட்டயர்டு ஹர்ட் முறையில் வெளியேறினார்.

மீண்டும் தாக்குதல்

மீண்டும் தாக்குதல்

அடுத்து வந்த நயீம்- அதே ஷமி பந்துவீச்சில் தான் சந்தித்த மூன்றாவது பந்திலேயே ஹெல்மட்டில் தாக்கப்பட்டார். அவர் சமாளித்து தான் அவுட் ஆகும் வரை ஆடினாலும், முதல் இன்னிங்க்ஸ் முடிந்த உடன் அவர் பீல்டிங் செய்ய வரவில்லை. அவருக்கும் தலையில் மூளை அழற்சி ஏற்பட்டது.

இரு மாற்று வீரர்கள்

இரு மாற்று வீரர்கள்

இரு வீரர்களும் மருத்துவமனைக்கு பரிசோதனைகள் செய்ய விரைந்த நிலையில், இருவருக்கும் மாற்று வீரர்களை அறிவித்தது வங்கதேச அணி. இது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது.

அதிர்ச்சியில் வங்கதேசம்

அதிர்ச்சியில் வங்கதேசம்

இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசுகிறார்கள் என்றாலும், இப்படி தாக்குதல் பாணியில் வீசுவார்கள் என எதிர்பார்க்காத வங்கதேச அணி அதிர்ச்சியில் உள்ளது. ஏற்கனவே, இரு வீரர்களை இழந்த அந்த அணி, இரண்டாம் இன்னிங்க்ஸ் பேட்டிங்கில் மேலும் காயம் அடைந்தால் கடும் சிக்கலை சந்திக்கும்.

Story first published: Friday, November 22, 2019, 20:17 [IST]
Other articles published on Nov 22, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+