Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இவரெல்லாம் மனுஷனே இல்லை.. மிரள வைக்கும் செயலை செய்த கேன் வில்லியம்சன்.. விராட் கோலிக்கு பின்னடைவு

மும்பை: தற்போது டெஸ்ட் கிரிக்கெட் ஆடிவரும் சிறந்த பேட்ஸ்மேன்களில் விராட் கோலிக்கு மிகப்பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக இங்கிலாந்தின் ஜோ ரூட், ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித், நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் மற்றும் இந்தியாவின் விராட் கோலி ஆகிய நால்வரும் மிகச் சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் என அடையாளப்படுத்தப்பட்டு வருகின்றனர்.

இந்த நால்வரும் மிக சிறப்பாக ஆடி வந்தாலும் கடந்த சில ஆண்டுகளாக விராட் கோலிக்கு மிகப்பெரிய சறுக்கல் ஏற்பட்டுள்ளது. அவரது டெஸ்ட் போட்டி செயல்பாடு திருப்திகரமாக இல்லை. இந்த நால்வரும் தங்களின் கடைசி 20 டெஸ்ட் போட்டிகளில் எப்படி செயல்பட்டு இருக்கின்றனர்? என்ற புள்ளி விவரம் வெளியாகி உள்ளது.

virat kohli joe root kane williamson

இதில் கேன் வில்லியம்சன் யாரும் நினைத்துப் பார்க்க முடியாத ஒரு சாதனையை செய்திருக்கிறார். தான் ஆடிய கடைசி 20 டெஸ்ட் போட்டிகளில் 11 சதம் மற்றும் 2 அரை சதங்களை அடித்திருக்கிறார் கேன் வில்லியம்சன். இரண்டு போட்டிகளுக்கு ஒரு சதம் என்ற அடிப்படையில் அவர் அடித்து இருக்கிறார். இது ஆகச் சிறந்த டெஸ்ட் செயல்பாடாக பார்க்கப்படுகிறது. அதே போல ஜோ ரூட் தான் ஆடிய கடைசி 20 டெஸ்ட் போட்டிகளில் 15 முறை 50 ரன்களுக்கும் மேல் சேர்த்துள்ளார்.

இவர்கள் இருவரின் இந்த சிறப்பான செயல்பாட்டால் கடந்த நான்கு ஆண்டுகளில் டெஸ்ட் பேட்டிங் சராசரியிலும் மிகப்பெரிய முன்னேற்றத்தை கண்டுள்ளனர். மேலும், அதிக டெஸ்ட் சதம் அடித்த வீரர்கள் பட்டியலிலும் இவர்கள் இருவரும் விரைவான முன்னேற்றத்தை கண்டுள்ளனர்.

ஜோ ரூட் இதுவரை 146 டெஸ்ட் போட்டிகளில் ஆடி இருக்கிறார். அவரது பேட்டிங் சராசரி 50 ஆகும். கடைசி 20 டெஸ்ட் போட்டிகளில் மட்டும் அவரது பேட்டிங் சராசரி 58.7 ஆகும். ஸ்டீவ் ஸ்மித் 109 போட்டிகளில் விளையாடி இருக்கிறார். அவரது டெஸ்ட் பேட்டிங் சராசரி 56.97 ஆகும். கடைசி 20 டெஸ்ட் போட்டிகளில் அவரது பேட்டிங் சராசரி 39.65 ஆகும். ஸ்டீவ் ஸ்மித்தின் பேட்டிங் சராசரி சமீப காலத்தில் சரிவை சந்தித்து இருந்தாலும் அவரது பேட்டிங் சராசரி 56 என்பதாக இருக்கிறது. அதற்கு முக்கிய காரணம் அதற்கு முந்தைய காலத்தில் அவரது பேட்டிங் சேராசரி 60ஐ ஒட்டி இருந்தது தான்.

கேன் வில்லியம்சன் 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 54.98 என்ற பேட்டிங் சராசரியை வைத்துள்ளார். கடைசி 20 டெஸ்ட் போட்டிகளில் மட்டும் 70.84 என்ற பேட்டிங் சராசரி வைத்துள்ளார் கேன் வில்லியம்சன். விராட் கோலி 113 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 49.15 என்ற அளவில் பேட்டிங் சராசரி வைத்துள்ளார். ஆனால், கடைசி 20 போட்டிகளில் அவரது பேட்டிங் சராசரி 38.26 மட்டுமே. இந்த காலகட்டத்தில் அவர் 2 சதம் மற்றும் 5 அரை சதம் மட்டுமே அடித்துள்ளார்.

இந்த நால்வரில் தங்களின் கடைசி 20 டெஸ்ட் போட்டிகளில் மிக மோசமான செயல்பாட்டை அளித்துள்ளார் விராட் கோலி. கடைசி 20 போட்டிகளில் மிகச் சிறப்பாக ஆடி இருப்பவர்களை பேட்டிங் சராசரி அடிப்படையில் வரிசைப்படுத்தினால் அதில் கேன் வில்லியம்சன் (70.84) முதல் இடத்தையும், ஜோ ரூட் (58.70) இரண்டாவது இடத்தையும், ஸ்டீவ் ஸ்மித் (39.65) மூன்றாவது இடத்தையும், விராட் கோலி (38.26) நான்காவது இடத்தையும் பெறுகின்றனர்.

ஒட்டுமொத்த டெஸ்ட் போட்டி பேட்டிங் சராசரியை அடிப்படையாக வைத்து பார்த்தால் ஸ்டீவ் ஸ்மித் (56.97) முதல் இடத்திலும், கேன் வில்லியம்சன் (54.98) இரண்டாவது இடத்திலும், ஜோ ரூட் (50.15) மூன்றாவது இடத்திலும், விராட் கோலி (49.15) நான்காவது இடத்திலும் உள்ளனர். ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது விராட் கோலி இந்த நால்வரில் நான்காவது இடத்தை மட்டுமே பெறுகிறார். இந்த நால்வரில் மிகக் குறைவான டெஸ்ட் சதம் அடித்து இருப்பதும் விராட் கோலி தான். ஜோ ரூட் 34 சதம், ஸ்டீவ் ஸ்மித் 32 சதம், கேன் வில்லியம்சன் 32 சதம் அடித்துள்ளனர். விராட் கோலி 29 சதம் மட்டுமே அடித்துள்ளார்.

Story first published: Monday, September 9, 2024, 18:21 [IST]
Other articles published on Sep 9, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+