Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

6 ரன்னில் ஆட்டமிழந்த விராட் கோலி.. டக் அவுட்டான பிரின்ஸ்.. 3 விக்கெட்டுகளை வீழ்த்திய வங்கதேச பவுலர்!

சென்னை: வங்கதேசம் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணியின் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி 6 ரன்களிலும், பிரின்ஸ் சுப்மன் கில் டக் அவுட்டாகியும் ஆட்டமிழந்து வெளியேறி உள்ளனர். இதனால் இந்திய அணி ஆட்டம் தொடங்கிய ஒரு மணி நேரத்தில் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.

இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் அணி கேப்டன் ஷான்டோ பவுலிங்கை தேர்வு செய்தார். வானிலை கொஞ்சம் மேகமூட்டமாக இருந்ததுடன், பிட்சும் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருந்தது.

ind vs ban virat kohli shubman gill

இதனால் இரு அணிகளும் 3 வேகப்பந்துவீச்சாளர்கள், 2 ஸ்பின்னர்கள் என்று கலவையிலேயே களமிறங்கினர். இதன்பின் இந்திய அணி தரப்பில் ரோஹித் சர்மா - யஷஸ்வி ஜெய்ஸ்வால் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. வங்கதேசம் அணி தரப்பில் முதல் ஓவரை டஸ்கின் அஹ்மத் வீசினார். நிதானமாக இந்திய அணி ரன்களை சேர்க்க, ஹசன் மஹ்முத் பவுலிங் ரோஹித் சர்மாவுக்கு சில பிரச்சனையை அளித்தது.

ஹசன் மஹ்முத் வீசிய 2வது ஓவரிலேயே சரியான லைன் மற்றும் லெந்தை அவர் கண்டறிந்து, பவுலிங் செய்ய தொடங்கினார். அவர் வீசிய 2வது ஓவரிலேயே ரோஹித் சர்மா எல்பிடபிள்யூ ஆகினார். நடுவர் நாட் அவுட் கொடுத்த நிலையில், அடுத்தடுத்து அவுட் ஸ்விங் மற்றும் இன்-ஸ்விங் வீசி அசரடித்தார். அதன்பின் மீண்டும் ஹசன் மஹ்முத் பவுலிங்கில் ரோஹித் சர்மா 6 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

இதன்பின் இந்திய அணியின் இளம் நட்சத்திர வீரர் சுப்மன் கில் களமிறங்கினார். அவர் தனது இடது காலினை விரைவாகவே மிடில் ஸ்டம்ப் லைனிற்கு கொண்டு வருவதை வாடிக்கையாக வைத்தார். இதனால் ஹசன் மஹ்முத் அவரின் இடது காலினை குறி வைத்தார். அப்போது ஒரு பந்து பைஸாக பவுண்டரி செல்ல, அசராமல் மீண்டும் முயன்ற ஹசன் மஹ்முத், அதேபோன்ற பவுலிங் செய்து விக்கெட் வீழ்த்தினார்.

இதனால் பிரின்ஸ் சுப்மன் கில் டக் அவுட்டாகி வெளியேறினார். அப்போது சேப்பாக்கம் மைதானத்தில் மிகப்பெரிய கரகோஷமெ எழுந்தது. விராட் கோலி களமிறங்க, ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். முதல் பந்திலேயே முதல் ரன்னை எடுக்க, அடுத்தடுத்து விராட் கோலி விராட் கோலி விரைவாக ரன்களை சேர்க்க தொடங்கினார். இதனால் விராட் கோலி ஒரு முடிவுடன் களமிறங்கி இருப்பதாக பார்க்கப்பட்டது.

அந்த நேரத்தில் மீண்டும் அட்டாக்கில் வந்த ஹசன் மஹ்முத், சரியாக விராட் கோலிக்கு 4வது ஸ்டம்ப் லைனில் கொஞ்சம் ஃபுல் லெந்தில் பவுலிங் செய்தார். அதனை ட்ரைவ் அடிக்க முயன்று விராட் கோலி பேட்டை விளாசினார். ஆனால் அது அவுட்சைட் எட்ஜாகி நேராக பந்து விக்கெட் கீப்பர் கைகளுக்கு சென்றது. இதனால் விராட் கோலி 6 பந்துளுக்கு 6 ரன்கள் எடுத்து வெளியேறினார். இதன் காரணமாக இந்திய அணி 34 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.

Story first published: Thursday, September 19, 2024, 10:41 [IST]
Other articles published on Sep 19, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+