ஆண்டிகுவா : டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் வங்கதேசத்துக்கு எதிரான சூப்பர் 8 ஆட்டத்தில் இந்திய அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் ஒரு ருசிகர சம்பவம் நடைபெற்று இருக்கிறது.
வங்கதேச வீரர் அடித்த பந்து ஒன்று சிக்ஸர் லைனில் செல்ல அதனை விராட் கோலியே படுத்து உருண்டு தேடி கண்டுபிடித்து இருக்கிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தின் வைரல் ஆகி வருகிறது.

90'ஸ் கிட்ஸ் எப்போதுமே தெருவில் கிரிக்கெட் விளையாடும் போது பந்து எங்கேயாவது சென்று சிக்கிக் கொள்ளும். அப்போது வேறு பந்து வாங்க காசு இல்லாத 90ஸ் கிட்ஸ் பந்து தொலைத்து விடக்கூடாது என்பதற்காக கடும் முயற்சி செய்து மீட்பார்கள். புதரில் விழுந்தாலும் சரி இல்லை வேறு வீட்டு மாடியில் விழுந்தாலும் சரி, எப்படியாவது படுத்து உருண்டு பந்தை தேடி எடுத்து வருவார்கள்.
அதை தான் தற்போது விராட் கோலி செய்திருக்கிறார். கிட்டத்தட்ட 2000 கோடி ரூபாய்க்கு அதிபதியான விராட் கோலி, பில்டிங் செய்து கொண்டிருந்தார். அப்போது ஆட்டத்தின் 17 புள்ளி இரண்டாவது ஓவரில் அக்சர் பட்டேல் வீசிய பந்தை ரிஷாத் ஹூசைன் சிக்சர் அடித்தார். அப்போது அந்த பந்து நேரடியாக பார்வையாளர்கள் மாடத்திற்கு முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரும்பு பலகைகள் கீழ் சென்றது.
இதை பார்த்த விராட் கோலி பந்தை எடுத்துக் கொடுக்கும் பால் பாய்ஸ் வரும் வரை தாமதிக்காமல் அவரே நேராக சென்று படுத்து உருண்டு பந்தை தேடி கையில் எடுத்தார். இந்த வீடியோ தற்போது சமூகத்தில் வைரலாகி வருகிறது. விராட் கோலி தாமே சென்று பந்தை எடுத்ததற்கு ஒரு முக்கிய காரணம் இருக்கின்றது.
அதாவது பந்து தேடி எடுக்கின்றேன் என்று அங்கிருந்து பால் பாய்கள் தாமதப்படுத்தினால் அது இந்தியாவுக்கு தான் ஆப்பாக மாறும்.
புதிய விதியின்படி குறிப்பிட்ட நேரத்திற்குள் ஓவரின் வீசி எடுக்க வேண்டும். இதற்காக தான் விராட் கோலி யாரையும் எதிர்பாராமல் அந்த பந்தை தானே தேடி எடுத்திருக்கிறார். மேலும் தோய்வான ஆடுகளங்களில் பந்தை காணவில்லை என்று புதிய பந்தை எடுத்தால் அது பேட்டிற்கு நன்றாக வரும். இதன் மூலம் பேட்ஸ்மேன்கள் ரன் அடிக்க ஏதுவான வாய்ப்பு அது மாறும். இப்படி ஒரு சாதகத்தை வங்கதேசத்திற்கு கொடுக்கக் கூடாது என்பதற்காக விராட் கோலி இப்படி செய்திருக்கலாம் என்று கிரிக்கெட் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.