மும்பை : இந்தியா, வங்கதேச அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி விராட் கோலியின் டெஸ்ட் கம்பேக் போட்டியாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் விராட் கோலி ஒன்பது மாதத்திற்கு பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு திரும்புகிறார். கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விராட் கோலி தனிப்பட்ட காரணங்களை காட்டி வெளியேறினார்.
இந்த சூழலில் இந்திய அணி அடுத்த ஐந்து மாதங்களில் 10 டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருக்கிறது. இதில் விராட் கோலியின் பங்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இன்னும் சொல்லப்போனால் fab ஃபோர் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் விராட் கோலி, ஜோ ரூட், ஸ்மித், கேன் வில்லியம்சன் அடங்கிய குழுவில் ஜோ ரூட் தற்போது சிறப்பாக விளையாடி வருகிறார்.

கேன் வில்லியம்சனும் நமக்கு கிடைத்த வாய்ப்பில் சரியாக பயன்படுத்தி வருகிறார். ஆனால் விராட் கோலி மட்டும் டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகவும் அமைதியாக இருக்கின்றார். விராட் கோலி கடைசியாக 2023 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 20ஆம் தேதி நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சதம் விளாசினார்.
அதன்பிறகு டிசம்பர் மாதம் 2023 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் 76 ரன்கள் குவித்தார். இதனால் விராட் கோலி ஒன்பது மாதங்களாக எந்த டெஸ்ட் போட்டிகளும் விளையாடாததால் அவரை பல வீரர்கள் முந்தி சென்றிருக்கின்றன. இதனால் அடுத்த 10 டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி தன்னுடைய அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி மீண்டும் டெஸ்டிலும் நான்தான் கிங் என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றார்.
இந்த நிலையில் 35 வயதான விராட் கோலி மாபெரும் சாதனை ஒன்று படைக்க வாய்ப்பு இருக்கிறது. வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விராட் கோலி 58 ரன்கள் அடித்தால் சர்வதேச கிரிக்கெட்டில் 27 ஆயிரம் ரன்களை அதிவேகமாக கடந்த வீரர் என்ற சாதனையை விராட் கோலி பெறுவார். தற்போது இந்த சாதனையை சச்சின் டெண்டுல்கர் வைத்திருக்கிறார். ஏற்கனவே விராட் கோலி 16,000 17,000 என 26 ஆயிரம் வரை அவர்தான் அதிவேகமாக இந்த மைல்களை எட்டிய வீரர் என்ற சாதனை வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சச்சின் டெண்டுல்கர் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 782 இன்னிங்ஸில் விளையாடி 34 ஆயிரத்து 357 ரன்கள் அடித்திருக்கிறார்.இலங்கை வீரர் சங்கக்கார 666 இன்னிங்ஸில் விளையாடி 28017 ரன்கள் அடித்திருக்கிறார். ஆஸ்திரேலிய வீரர் ரிக்கி பாண்டிங் 668 இன்னிங்ஸில் விளையாடி 27483 ரன்கள் அடித்திருக்கிறார். விராட் கோலி 591 இன்னிங்சில் விளையாடி 26942 ரன்கள் குவித்திருக்கிறார்.
இதேபோன்று விராட் கோலி இன்னும் டெஸ்ட் கிரிக்கெட்டில் 152 ரன்கள் அடித்தால் 9000 ரன்களை தொட்ட நான்காவது இந்திய வீரர் என்ற பெருமையை பெறுவார். இதற்கு முன்பு கவாஸ்கர், சச்சின், டிராவிட் ஆகியோர் இந்த மைல் கல்லை கடந்திருக்கிறார்கள். ஆனால் 900 ரன்களை கடந்த வீரர்கள் பட்டியலில் விராட் கோலி மெதுவாக தான் இந்த மைல் கல்லை எட்ட வாய்ப்பு இருக்கிறது.
கவாஸ்கர் 192 இன்னிங்சில் 9000 ரன்கள் கடந்திருக்கிறார். கோலி தற்போது 191 இன்னிங்ஸ் விளையாடுகிறார். இதனால் வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் விராட் கோலி 152 ரன்கள் அடித்தால் கவாஸ்கரின் சாதனையை சமன் செய்ய முடியும். இதனால் வங்கதேசத்துக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி இரண்டு மாபெரும் சாதனைகள் படைக்கும் வாய்ப்பு இருக்கிறது.