Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs BAN - 6.5 அடி உயர பவுலரை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறிய விராட் கோலி.. இன்னும் சரியாகாத குறை

மும்பை : வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கு இன்னும் இரண்டு நாட்களே எஞ்சியுள்ள நிலையில் இந்திய அணி வீரர்கள் தற்போது தீவிரமாக தயாராகி வருகின்றனர். குறிப்பாக இலங்கை அணிக்கு எதிரான தொடரில் சொதப்பிய விராட் கோலி, அதன் பிறகு ஒரு மாதம் இங்கிலாந்தில் தனது மனைவியுடன் நேரத்தை செலவழித்து வந்தார்.

ஆனால் ரோகித் சர்மா இலங்கைக்கு எதிரான தொடரில் சிறப்பாக விளையாடிய பிறகும் இந்த ஒரு மாதம் ஓய்வில் தொடர் பயிற்சியில் ஈடுபட்டு தனது உடல் தகுதியை மெருகேற்றும் பணியில் இருந்தார். இந்த சூழலில் வங்கதேசத்துக்கு எதிரான போட்டிகள் சிறப்பாக விளையாட வேண்டும் என்ற நெருக்கடியில் இருக்கும் விராட் கோலி தற்போது பயிற்சி முகாமில் தீவிரமாக விளையாடி வருகிறார்.

india vs bangladesh ind vs ban cricket virat kohli

தமக்கு இருக்கும் குறையை சரி செய்வதற்காக விராட் கோலி இந்தியாவின் தலைசிறந்த பவுலர்களை வலை பயிற்சியில் எதிர்கொண்டார். தற்போது வங்கதேச அணியில் நகித் ராணா என்ற உயரமான ஒரு பவுலர் இருக்கிறார். அவரை சமாளிப்பதற்காக இந்தியா தற்போது தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது .

அண்மையில் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட 6.5 அடி உயரம் உள்ள குர்னூர் பரார் என்ற வீரரை பயிற்சி முகாம்க்கு இந்தியா அழைத்து இருக்கிறது. இதன் மூலம் வங்கதேச வீரரின் நெருக்கடியை சமாளிக்க முடியும் என கம்பீர் திட்டம் போட்டு இருக்கிறார். அதற்கு ஏற்றார் போல் குர்னூர் பரரார் பயிற்சி முகாமில் அபாரமாக பந்து வீசி இருக்கிறார். குர்னூர் பரரார் உயரமாக இருப்பதால் அவர் வீசும் போது பந்தின் பவுன்ஸ் அதிகமாக இருக்கிறது.

அதனை எதிர்கொள்ள முடியாமல் விராட் கோலி பயிற்சி முகாமில் தடுமாறி இருக்கிறார். விராட் கோலி அனைத்தையும் Front foot வைத்து விளையாட முயற்சி செய்து இருக்கிறார். அப்போது இரண்டு முறை பந்து எட்ஜ் ஆனதாக தகவல் வெளியாகியுள்ளது.குர்னூர் பிரார், பஞ்சாப் அணியில் ஐபிஎல் தொடரில் விளையாடினார்.இவர் லக்னோ அணிக்கு எதிராக ஒரு ஆட்டத்தில் விளையாடினார். இதில் மூன்று ஓவர் வீசி அவர் 42 ரன்கள் விட்டுக் கொடுத்தார்.

முதல் தடவை கிரிக்கெட் போட்டிகளில் ஐந்து ஆட்டங்களில் விளையாடி உள்ள குர்னூர் பரார் ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார். இந்த சூழலில் விராட் கோலி பும்ராவை தனியாக எதிர்கொண்டிருக்கிறார். அதில் பும்ராவின் அபாரமான யாக்கர்களையும் இன்ஸ்விங் பந்துகளையும் விராட் கோலி எதிர் கொண்டிருக்கிறார். இதில் பும்ரா வீசிய ஒரு பந்தை கணிக்க முடியாத விராட் கோலி எல்பிடபுள்யூ ஆகி இருக்கிறார்.

அதற்கு பும்ரா அவுட் என கூறியதும் விராட் கோலி கிடையாது என மறுக்க உடனே பும்ரா தமக்கு ரிவ்யூ வேண்டும் என கேட்டு இருக்கிறார். இந்த காட்சி அங்கு இருந்தவர்களை சிரிப்பலையில் ஆழ்த்தியுள்ளது. டெஸ்ட் போட்டியில் கடைசியாக விராட் கோலி தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடப்பாண்டில் கோலி ஒரே ஒரு டெஸ்டில் தான் இதுவரை விளையாடி இருக்கிறார். இதனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் தன்னுடைய திறமையை மீண்டும் விரும்புவதற்காக விராட் கோலி தற்போது இந்தியாவின் தலைசிறந்த பவுலர்களை பயிற்சி முகாமில் எதிர் கொண்டு வருகிறார்.

Story first published: Monday, September 16, 2024, 23:31 [IST]
Other articles published on Sep 16, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+