மும்பை : வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை விராட் கோலி ரசிகர்களும் ரிஷப் பண்ட் ரசிகர்களும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு காரணம் 2024 ஆம் ஆண்டு விராட் கோலி ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் மட்டும்தான் விளையாடினார். அதன் பிறகு நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் அவர் பங்கேற்கவில்லை.
கிட்டத்தட்ட 8 மாதங்களுக்கு பிறகு விராட் கோலி டெஸ்ட் போட்டிக்கு திரும்பிருக்கிறார். இதேபோன்று ரிஷப் பண்ட், சுமார் இரண்டு ஆண்டுகள் கழித்து டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு திரும்பி உள்ளார்.
இந்த சூழலில் வங்கதேச தொடர் எவ்வாறு இருக்கும் என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் சுரேஷ் ரெய்னா கணிப்பு வெளியிட்டு இருக்கிறார்.

இது குறித்து பேசிய அவர், ரோகித் சர்மா ஒரு மகத்தான கேப்டனாக விளங்குகிறார். இந்திய அணி t20 உலக கோப்பை வென்றதன் மூலம் ரோகித் சர்மா தன்னுடைய கேப்டன்சி திறமையை நிரூபித்து இருக்கிறார். தற்போது ரசிகர்கள் அனைவரும் விராட் கோலி மீது தான் கவனம் செலுத்துவார்கள். ஏனென்றால் நீண்ட நாட்களுக்குப் பிறகு விராட் கோலி அணிக்கு திரும்பிருக்கிறார்.
விராட் கோலிக்கு டெஸ்ட் போட்டிகள் மிகவும் பிடிக்கும். டெஸ்ட் போட்டிகளுக்கு அதிக மரியாதை கொடுக்கும் ஒரு வீரராக கோலி இருக்கிறார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு செல்ல இந்தியா போராடும் நிலையில், இந்தியா அடுத்த 10 டெஸ்ட் போட்டிகளின் விளையாடுகிறது. இந்த தொடர்களை எல்லாம் விராட் கோலி ரன்களை பொளக்கப்போவது உறுதி என நான் நம்புகிறேன்.
விராட் கோலி எப்போதுமே நெருக்கடியில் தான் சிறப்பாக விளையாடுவார். இனிவரும் 10 டெஸ்ட் போட்டிகளிலும் விராட் கோலி தான் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கப் போகும் வீரராக இருப்பார். வங்கதேச அணியில் சிறந்த வேகப்பந்துவீச்சாளர் இருக்கிறார்கள். ஆனால் விராட் கோலி ஏற்கனவே வேகப்பந்துவீச்சாளர்களை எவ்வாறு எதிர்கொள்வார் என்று நமக்கு தெரியும்.
விராட் கோலி இடம் நீங்கள் ஒரு சவாலை கொடுத்தால் அது அவரை சிறப்பாக விளையாட வைக்கும் என்று நான் நம்புகிறேன் என்று சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார். விராட் கோலி வங்கதேசத்துக்கு எதிராக ஆறு டெஸ்ட் போட்டியில் விளையாடி ஒட்டுமொத்தமாக 437 ரன்கள் அடித்துள்ளார். அதிகபட்சமாக 204 ரன்கள் அடங்கும். வங்கதேசத்துக்கு எதிராக சராசரியாக கோலி 54 ரன்கள் அடித்துள்ளார்.