மும்பை : டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் சூப்பர் 8 சுற்றில் வங்கதேச அணியை 50 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்திருக்கிறது. இதன் மூலம் அரையிறுதி சுற்று வாய்ப்பை இந்தியா பிரகாசப்படுத்திக் கொண்டிருக்கிறது.
இந்த சூழலில் வங்கதேச அணிக்கு ஏன் தேவையில்லாத பில்டப்பை தருகிறார்கள் என்று ஷேவாக் மீண்டும் அந்த அணியை வம்பு இழுத்து பேசி இருக்கிறார். ஏற்கனவே ஷகிபுல் ஹசனை அவர் கடுமையாக சாடி இருந்ததும் அதற்கு ஷகிபுல் ஹசன் பதிலடி கொடுத்ததும் என வாய்க்கால் தகராறு சென்று கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் மீண்டும் சேவாக் தேவையில்லாமல் வங்கதேச அணியை மோசமாக சாடியிருக்கிறார்.இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஷேவாக், உண்மையை சொல்ல வேண்டுமென்றால் வங்கதேசம் அணி நமது நாளை பாழாக்கி விட்டார்கள். நேற்றைய போட்டி நீண்ட நேரம் நடைபெற்றது போல் எனக்கு தெரிந்தது. இதுவே வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்திருந்தால் அவர்கள் குறைவான இலக்கையே அடித்து இருப்பார்கள்.
அதனை இந்தியா மிக எளிதாக துரத்தி வெற்றி பெற்றிருக்கும். நாம் அனைவரும் விரைவாக வீட்டிற்கு சென்று கொண்டிருப்போம். ஆனால் இது வெறும் பங்களாதேஷ் தான். அவர்களுக்கு ஏன் தேவையில்லாத பில்டப்பை அனைவரும் தருகிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை. இன்றைய நாள் தன்னுடைய திறமையை வெளிப்படுத்துவார் என்று நான் மிகுந்த ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருந்தேன்.
இந்தியா போன்ற பெரிய அணிக்கு எதிராக விளையாடுகிறார். அவருக்கு துணையாக ஒரு நல்ல வீரர் களத்தில் இருக்கிறார். இந்த சூழ்நிலையில் 15 அல்லது 16 வது ஓவர் வரை சகிபுல் ஹசன் பொறுமையாக விளையாடி களத்தில் நின்று இருக்க வேண்டும். ஆனால் சகிபுல் ஹசன் எனக்கு எப்போதுமே ஒரு பெரிய ஏமாற்றமாக தான் இருக்கின்றார்.
அவருக்கு அவ்வளவு பெரிய அனுபவம் இருக்கின்றது. ஆனால் அதனை அவர் சரியாக பயன்படுத்திக் கொள்வது கிடையாது. ஹர்திக் பாண்டியா நேற்று நல்ல பொழுது போக்கு ரசிகர்களுக்கு கொடுத்திருக்கிறார். ஹர்திக் பாண்டியா அவசரமாக விளையாட வேண்டும் என்ற சூழ்நிலை அவருக்கு கிடையாது. ஏனென்றால் பந்துகளை எளிதாக பவுண்டரி அடிக்கக்கூடிய திறமை அவரிடம் இருக்கின்றது. இது போன்ற ஹர்திக் பாண்டியாவை தான் நாம் மிகவும் மிஸ் செய்தோம். 27 பந்துகளில் அரைசதம் அடிக்கும் ஹர்திக் பாண்டியா தான் தேவையே தவிர 30 பந்துகளின் 31 அடிக்கும் ஹர்திக் பாண்டியா தேவையில்லை என்று ஷேவாக் குறிப்பிட்டுள்ளார்.