Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

விஜய் ஷங்கருக்கு வடை போச்சே.. செம ஆட்டம் ஆடி அவர் இடத்துக்கு துண்டு போட்ட ராகுல்!!

கார்டிப் : வங்கதேச அணிக்கு எதிரான உலகக்கோப்பை பயிற்சிப் போட்டியில் இந்திய அணியில் தோனி, ராகுல் அபாரமாக ஆடி சதம் அடித்தனர்.

இதில் ராகுல் அடித்த சதம், உலகக்கோப்பை போட்டிகளின் போது அணியில் அவருக்கு இடம் உண்டு என்பதை உறுதி செய்துள்ளது. அதே சமயம், விஜய் ஷங்கர் பெஞ்ச்சில் உட்கார வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

குழப்பம்

குழப்பம்

உலகக்கோப்பை போட்டிகளில் பேட்டிங் வரிசையில் நான்காம் இடத்தில் எந்த வீரரை ஆடவைப்பது என்ற குழப்பம் இருந்து வந்தது. தேர்வுக் குழுவினர் விஜய் ஷங்கரை அந்த இடத்திற்காக தேர்வு செய்தனர்.

ஐபிஎல் சொதப்பல்

ஐபிஎல் சொதப்பல்

எனினும், விஜய் ஷங்கர் ஐபிஎல் தொடரில் சரியாக ரன் குவிக்கவில்லை. அதே சமயம், ராகுல் ஐபிஎல் தொடரில் துவக்க வீரராக களமிறங்கி அதிரடியாக ரன் குவித்திருந்தார். அதனால், பலரும் ராகுலை நான்காம் இடத்தில் பேட்டிங் செய்ய வைக்கலாம் என கூறி வந்தனர்.

இந்தியா பேட்டிங்

இந்தியா பேட்டிங்

இந்த நிலையில், பயற்சிப் போட்டியில் வங்கதேச அணிக்கு எதிராக இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. துவக்க வீரர்கள் ரோஹித் சர்மா, தவான் மீண்டும் ஒரு மோசமான துவக்கம் அளித்தனர். அடுத்து கோலி - ராகுல் ஜோடி சேர்ந்தனர்.

விஜய் ஏமாற்றம்

விஜய் ஏமாற்றம்

ராகுல் அதிரடியாக சதம் கடந்து அசத்தினார். அதே சமயம், விஜய் ஷங்கர் ஐந்தாம் இடத்தில் களமிறங்கி 2 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். இதனால், உலகக்கோப்பை தொடரில் ராகுல் நான்காம் இடத்தில் பேட்டிங் செய்யும் வாய்ப்பை பெறுவார் என தெரிகிறது.

வாய்ப்பை தவறவிட்டார்

வாய்ப்பை தவறவிட்டார்

விஜய் ஷங்கர் தனக்கு கிடைத்த அரிய வாய்ப்பை தவறவிட்டு விட்டார் என்பதே உண்மை. இந்தப் போட்டியில் தோனியும் அதிரடியாக ஆடி சதம் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Tuesday, May 28, 2019, 23:33 [IST]
Other articles published on May 28, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+