Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சிக்ஸ் அடிச்சு செஞ்சுரி போட்ட ஸ்டைல் இருக்கே.. அப்படியே பழைய தோனியை பார்த்த மாதிரியே இருந்துச்சு!!

கார்டிப் : 2019 உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக நடைபெறும் பயிற்சிப் போட்டியில், வங்கதேச அணியை சந்தித்தது இந்தியா.

இந்தப் போட்டியில் தோனி அதிரடியாக ஆடி, சிக்ஸர்கள் விளாசி, சதம் அடித்து இந்திய ரசிகர்களை திக்குமுக்காடச் செய்தார். ரசிகர்கள் பழைய தோனியை பார்த்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

முதல் போட்டியில் சொதப்பல்

முதல் போட்டியில் சொதப்பல்

வங்கதேச அணிக்கு முன், இந்தியா, நியூசிலாந்து அணியை சந்தித்தது. அந்தப் போட்டியில் தோனி உட்பட முக்கிய இந்திய பேட்ஸ்மேன்கள் சொதப்பலாக ஆடினர். இதனால், வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் இந்திய பேட்ஸ்மேன்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.

மிரள வைத்த தோனி

மிரள வைத்த தோனி

இந்த நிலையில், 5வது விக்கெட்டுக்கு ராகுலுடன் ஜோடி சேர்ந்து அதிரடியாக ஆடினார் தோனி. ராகுல் சதம் அடித்து வெளியேறிய பின்னும், தொடர்ந்து அதிரடியாக ஆடிய தோனி, 74 பந்துகளில் சதம் அடித்து மிரள வைத்தார்.

ஐபிஎல் பார்ம்

ஐபிஎல் பார்ம்

அதிலும், இந்தப் போட்டியில் சிக்ஸர்களாக அடித்து தெறிக்கவிட்ட தோனி, தன் சதத்தையும் சிக்ஸர் அடித்துதான் நிறைவு செய்தார். ஐபிஎல் தொடரில் கலக்கிய தோனி அதே பார்மில் இருப்பது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

பழைய தோனி

பழைய தோனி

பின்வரிசையில் பேட்டிங் செய்யும் தோனி சதம் அடிப்பதே அபூர்வம் என்று ஆகிவிட்ட நிலையில், சிக்ஸர் அடித்து அவர் தன் சதத்தை நிறைவு செய்தது, இந்திய ரசிகர்களுக்கு பழைய நினைவுகளை கிளறிவிட்டது.

நீண்ட நேரம் பேட்டிங்

நீண்ட நேரம் பேட்டிங்

தோனி இந்தப் போட்டியில் ஏழு சிக்ஸர், எட்டு ஃபோர் அடித்தார் 78 பந்துகளில் 113 ரன்கள் குவித்தார். 23வது ஓவரில் களமிறங்கிய தோனி, 50வது ஓவரின் 2வது பந்து வரை களத்தில் நின்றார். தோனியின் அதிரடியால் இந்தியா 50 ஓவர்களில் 359 ரன்களை எட்டியது.

Story first published: Tuesday, May 28, 2019, 23:02 [IST]
Other articles published on May 28, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+