Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இன்னும் 66 ரன்கள் தேவை.. யஷஸ்வி ஜெய்ஸ்வால் படைக்கப் போகும் ரெக்கார்ட்.. ரஹானே சாதனைக்கு ஆப்பு!

கான்பூர்: வங்கதேசம் அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் இளம் நட்சத்திர வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 66 ரன்கள் சேர்த்தால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் அதிக ரன்களை விளாசிய இந்திய வீரர் என்ற ரஹானேவின் சாதனையை முறியடிக்க வாய்ப்பு அமைந்துள்ளது.

இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி கான்பூர் மைதானத்தில் நாளை நடக்கவுள்ளது. இதற்காக இந்திய அணி வீரர்கள் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். அதிலும் யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் பயிற்சி உச்சக்கட்டத்தில் உள்ளது. சேப்பாக்கம் மைதானத்தில் முதல் டெஸ்ட் போட்டி முடிவடைந்த 15 நிமிடங்களிலேயே ஜெய்ஸ்வால் உடனடியாக பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டார்.

ind vs ban yashasvi jaiswal ravichandran ashwin

அதேபோல் முதல் டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்ஸில் சுப்மன் கில் - ரிஷப் பண்ட் பேட்டிங் செய்த போது, ஜெய்ஸ்வால் பேட்டிங் பயிற்சியில் தான் இருந்தார். ஒருநாளில் குறைந்தது 10 மணி நேரத்திற்கும் மேலாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் பயிற்சி மேற்கொண்டது பயிற்சியாளர்கள் கம்பீர், அபிஷேக் நாயர் உள்ளிட்டோருக்கே ஆச்சரியத்தை கொடுத்தது.

அதற்கேற்ப பேட்டிங்கில் பல்வேறு சாதனைகளை ஜெய்ஸ்வால் படைத்து வருகிறார். கடந்த போட்டியிலேயே 66 ரன்கள் விளாசியதன் மூலமாக முதல் 10 டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் விளாசிய இந்திய வீரர் என்ற சுனில் கவாஸ்கரின் சாதனையை முறியடித்தார். 10 போட்டிகளில் முடிவில் மொத்தமாக 1,094 ரன்களை விளாசி அசத்தினார்.

அதேபோல் வங்கதேசம் அணியின் 2வது டெஸ்ட் போட்டியில் 2 சாதனைகள் படைக்க ஜெய்ஸ்வாலுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த டெஸ்ட் போட்டியில் ஜெய்ஸ்வால் இரு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து 194 ரன்கள் சேர்த்தால், 2024ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆயிரம் ரன்களை விளாசிய முதல் வீரர் என்ற சாதனையை ஜெய்ஸ்வால் படைக்க முடியும். தற்போது ஜெய்ஸ்வால் 806 ரன்கள் விளாசி இருக்கிறார்.

அதேபோல் இந்த போட்டியில் 66 ரன்கள் விளாசினால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் வரலாற்றில் அதிக ரன்களை விளாசிய இந்திய வீரர் என்ற சாதனையை ஜெய்ஸ்வால் படைப்பார். தற்போது இந்திய வீரர் அஜிங்கியா ரஹானே 2021-23 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் 1,159 ரன்கள் விளாசியதே சாதனையாக உள்ளது.

தற்போது ஜெய்ஸ்வால் 1,094 ரன்களுடன் இருப்பதால், இன்னும் 66 ரன்கள் சேர்க்கும் பட்சத்தில் ரஹானேவின் சாதனையை முறியடிக்க முடியும். இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் மட்டும் 3 சதங்கள் மற்றும் 5 அரைசதங்கள் உட்பட 1094 ரன்கள் ஜெய்ஸ்வால் விளாசி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, September 26, 2024, 16:51 [IST]
Other articles published on Sep 26, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+