Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வெளிநாட்டு பெண்ணுடன் சுற்றிய ஜெய்ஸ்வால்.. பயிற்சியில் கடும் சொதப்பல்.. கடுப்பான கம்பீர்

மும்பை : வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் களமிறங்க போகும் இந்திய அணி வீரர்கள் தற்போது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்தியா விளையாடப் போகும் 10 டெஸ்ட் போட்டிகளில் முதல் டெஸ்ட் வங்கதேசத்துக்கு எதிரானது.

இதனால் இந்த போட்டியில் சிறப்பாக விளையாடி நல்ல அனுபவத்தை பெரும் வீரர்கள் நடப்பாண்டு இறுதியில் நடைபெறும் ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் பெறுவார்கள். இந்த சூழலில் இந்திய அணியின் தொடக்க வீரரான ஜெய்ஸ்வால் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்திருக்கிறது.

india vs bangladesh ind vs ban virat kohli

இதற்கு காரணம் கடந்த இங்கிலாந்து தொடரில் தொடர்ந்து இரண்டு போட்டிகளில் இரட்டை சதம் அடித்து ஜெய்ஸ்வால் அந்த தொடரின் 200 ரன்களுக்கு மேல் குவித்து இருந்தார். இந்த சூழலில் ஜெய்ஸ்வால், வங்கதேசம் மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் சிறப்பாக விளையாடி ரன் குவிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஜெய்ஸ்வால் தற்போது பயிற்சி முகாமில் தடுமாறி வருவதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது.

ஜெய்ஸ்வால் தனது ஓய்வு நேரத்தில் கிரிக்கெட் குறித்து எந்த பயிற்சியும் செய்யாமல் ஹாமில்டன் என்ற இங்கிலாந்து பெண்ணுடன் சுற்றிக்கொண்டு இருந்தார். இதுகுறித்து அப்போதே ரசிகர்கள் பலரும் விமர்சித்து இருந்தார்கள். ஜெய்ஸ்வால் கிரிக்கெட்டில் கவனம் செலுத்த வேண்டும் என்று பலரும் அவருக்கு அறிவுரை வழங்கியிருந்தார்கள். இந்த நிலையில் ஜெய்ஸ்வால் தற்போது சென்னையில் உள்ள பயிற்சி முகாமில் பங்கு பெற்று பவுலர்களை எதிர்கொள்ள முடியாமல் கடுமையாக தடுமாறினார்.

குறிப்பாக பும்ராவை பயிற்சி முகாமில் எதிர்கொண்ட போது அவர் தொடர்ந்து பும்ராவிடம் போல்ட் ஆகி இருக்கிறார். இதை பார்த்த போது என்ன இந்த பையன் கிரிக்கெட்டை ஆட தெரியாத மாதிரி விளையாடுகிறார் என்று தான் நினைக்கத் தோன்றியது. முதல் 9 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய ஜெய்ஸ்வால் ஆயிரம் ரன்களுக்கு மேல் அடித்திருந்தார். எனினும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் ஜெய்ஸ்வால் பெரிய அளவில் சாதிக்கவில்லை.

எனினும் இந்தியாவில் பவுன்ஸ் மற்றும் வேகம் பெரிய அளவில் வேகம் பந்துவீச்சாளர்களுக்கு கை கொடுக்காது. ஆனாலும் வங்கதேசத்தில் தற்போது இடம் பெற்றுள்ள நஹித் ராணா என்ற வீரர் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிகள் சிறப்பாக செயல்பட்டு அசத்தி இருக்கிறார். இதனால் அதேபோல் ஒரு வேகத்தை அவர் இந்தியாவிலும் வெளிப்படுத்தினால் நிச்சயம் அது ஜெயிஷ்வாலுக்கு ஆபத்தாக தான் இருக்கும்.

இன்னும் வங்கதேசத்துக்கு எதிராக டெஸ்ட் போட்டி தொடங்க இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் தமக்குள் இருக்கும் பிரச்சனையை ஜெய்ஸ்வால் சரி செய்வாரா? இது மனதில் ஏற்பட்ட பிரச்சனையா இல்லை கிரிக்கெட்டில் ஏற்பட்ட சிக்கலா என்று கேள்வி எழுந்துள்ளது
எனினும் பயிற்சி முகாமல் பும்ரா போன்ற வீரரை எதிர்கொண்டதால் ஜெய்ஸ்வால் இப்படி திணறி இருக்கலாம்.

வங்கதேச பௌலர்கள் எதிராக அவர் நன்றாக விளையாடுவார் என்றும் கிரிக்கெட் வல்லுனர்கள் நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார்கள். ஆனால் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று ஆஸ்திரேலிய வீரர்கள் ஜெயிஸ்வாலை பாராட்டியுள்ள நிலையில் பும்ராவை எதிர்கொள்ள முடியவில்லை என்றால் அந்தப் பாராட்டுக்கு சரியான நபர் தான் ஜெயிஸ்வாலா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Story first published: Tuesday, September 17, 2024, 7:58 [IST]
Other articles published on Sep 17, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+