Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs CAN பிளேயிங் 11.. கடும் சிக்கலில் விராட் கோலி.. ஜெய்ஸ்வாலுக்கு வாய்ப்பு? ரோஹித்துக்கு சவால்

ஃப்ளோரிடா: 2024 டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியா மற்றும் கனடா அணிகளுக்கு இடையேயான குரூப் ஏ பிரிவு போட்டி நடைபெற உள்ளது. இந்திய அணி தான் ஆடிய முதல் மூன்று குரூப் சுற்று போட்டிகளிலும் வெற்றி பெற்று ஆறு புள்ளிகள் உடன் குரூப் ஏ வில் முதல் இடத்தை பிடித்து சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறி விட்டது.

இந்த நிலையில் கனடா அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியில் சில மாற்றங்களை செய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. சூப்பர் 8 சுற்று போட்டிகள் முழுவதும் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமான வெஸ்ட் இண்டீஸ்-இல் நடைபெறுவதால் நிச்சயமாக கூடுதலாக ஒரு சுழற் பந்துவீச்சாளர் அணியில் சேர்க்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

T20 World Cup Indian national cricket team Cricket 20 2024


அடுத்து விராட் கோலியின் ஃபார்ம் இந்திய அணிக்கு கவலை அளிக்கும் வகையில் உள்ளது. அவர் முதல் மூன்று போட்டிகளிலும் மொத்தமே ஐந்து ரன்கள் மட்டுமே சேர்த்தார். இதை அடுத்து அவரை துவக்க வீரராக ஆட வைத்தது சரியா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அவர் மீண்டும் மூன்றாம் வரிசையில் பேட்டிங் செய்ய வேண்டும் எனவும் முன்னாள் வீரர்கள் சிலர் யோசனை கூறியுள்ளனர்.

அப்படி விராட் கோலி மூன்றாம் வரிசைக்கு சென்றால் துவக்க வீரராக ஜெய்ஸ்வால் அணியில் சேர்க்கப்பட வேண்டும். அவரை சேர்த்தால் வேறு ஒரு வீரரை அணியிலிருந்து நீக்க வேண்டும். நிச்சயம் சிவம் துபே-வைத்தான் கேப்டன் ரோஹித் சர்மா நீக்குவார். ஆனால் இந்த மாற்றத்தை செய்தால் அணியின் சமநிலை பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதால் விராட் கோலி தொடர்ந்து துவக்க வீரராகவே களமிறங்குவார் என இந்திய அணி வட்டாரம் தெரிவித்துள்ளது.

பந்து வீச்சில் வேண்டுமானால் முகமது சிராஜ் நீக்கப்பட்டு கூடுதல் சுழற் பந்துவீச்சாளரராக குல்தீப் யாதவ் சேர்க்கப்பட வாய்ப்பு உள்ளது. இதைத் தவிர அணியில் பெரிய மாற்றம் எதுவும் இருக்காது. கனடா அணியைப் பொறுத்தவரை அந்த அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்துவிட்டது.

குரூப் சுற்றில் அயர்லாந்து அணியை மட்டுமே வீழ்த்தி இருந்தது கனடா. பாகிஸ்தான் மற்றும் அமெரிக்காவிடம் தோல்வி அடைந்து இருந்தது. எனினும், குரூப் ஏ பிரிவில் அதிக ஸ்கோர்களை அடித்த அணியாக உள்ளது கனடா. எனவே, இந்திய அணி இந்தப் போட்டியில் கவனமாக விளையாட வேண்டும். இந்தியா - கனடா போட்டி நடைபெற உள்ள ஃப்ளோரிடாவில் கடுமையாக மழை பெய்து வருவதால் இந்த போட்டி முழுமையாக நடைபெறுமா? என்ற சந்தேகமும் உள்ளது.


இந்தியா பிளேயிங் 11 : ரோஹித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், சிவம் துபே, ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ் (அல்லது) குல்தீப் யாதவ்

Story first published: Saturday, June 15, 2024, 6:36 [IST]
Other articles published on Jun 15, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+