For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

”குருநாதா.. காப்பாத்துங்க குருநாதா” ரோகித் சர்மாவிடம் சரணடைந்த சுப்மன் கில்.. இன்ஸ்டா பதிவை பாருங்க!

ஃப்ளோரிடா : ரோகித் சர்மா உடன் சுப்மன் கில் மோதலில் ஈடுபட்டதாக கூறப்பட்டு வந்த நிலையில், இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிட்டுள்ள பதிவு ட்ரெண்டாகி வருகிறது.

டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் ரிசர்வ் வீரராக சுப்மன் கில் பயணித்துள்ளார். இந்திய அணி வீரர்களுடன் பயிற்சியில் ஈடுபட்டாலும், இந்திய அணி விளையாடும் போட்டிகளை நேரில் காண சுப்மன் கில் வரவில்லை. ஆவேஷ் கான், ரிங்கு சிங், கலீல் அஹ்மத் ஆகியோர் நேரில் வந்த போதும், சுப்மன் கில் மட்டும் மைதானத்திற்கு வராமலேயே இருந்தார்.

t20 world cup indian national cricket team cricket IND vs CAN 20 2024

இதனிடையே சாரா டெண்டுல்கரும் அமெரிக்கா வந்தார். இதனால் காதலியுடன் சுப்மன் கில் நேரம் செலவிட்டு வந்ததாக கூறப்பட்டது. இதற்கேற்றபடி சுப்மன் கில்லும் ஹோட்டலிலேயே தங்குவதாக இந்திய அணி நிர்வாகத்திடம் கூறியிருந்தார். இந்த நிலையில் குரூப் சுற்றுடன் சுப்மன் கில் நாடு திரும்புவதாக தகவல் வெளியாகியது. ரிங்கு சிங், கலீல் அஹ்மத் இந்திய அணியுடன் பயணிக்கின்றனர்.

ஆனால் ஆவேஷ் கான் மற்றும் சுப்மன் கில் ஏன் நாடு திரும்புகிறார்கள் என்ற தகவல் வெளி வந்தது. இது ரசிகர்களிடையே சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதன்பின் விசாரிக்கையில் சுப்மன் கில் ஒழுங்கீன நடவடிக்கை காரணமாகவே இந்தியாவுக்கு திரும்பவுள்ளதாக விமர்சனங்கள் எழுந்தன. அதுமட்டுமல்லாமல் இன்ஸ்டாகிராமில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மாவை பின் தொடர்வதில் இருந்து சுப்மன் கில் விலகினார்.

இதனால் ரோகித் சர்மா ரசிகர்கள் பலரும் சுப்மன் கில்லை சோசியல் மீடியாவில் பொளந்து கட்டி வந்தனர். அதுமட்டுமல்லாமல் சுப்மன் கில் - ரோகித் சம்ரா இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் சுப்மன் கில் தனது இன்ஸ்டாகிராம் பதிவில், ரோகித் சர்மா மற்றும் அவரது மகள் சமைராவுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவுடன், நானும் சமைராவும் ரோகித் சர்மாவிடம் இருந்து ஒழுக்கத்தை கற்று வருகிறோம் என்று எழுதியிருக்கிறார். இதன் மூலம் சுப்மன் கில் பல்வேறு சர்ச்சைகளுக்கும் முடிவுரை எழுதியுள்ளார். இதன் காரணமாக ரோகித் சர்மா ரசிகர்கள் சுப்மன் கில்லை விமர்சிப்பதையும் நிறுத்தியுள்ளனர்.

Story first published: Sunday, June 16, 2024, 14:40 [IST]
Other articles published on Jun 16, 2024
English summary
IND vs CAN : Shubman Gill ends the controversy with a instagram post with Indian Captain Rohit Sharma
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+