Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நீ பேசாம நம்பர் 3க்கு போயிரு சிவாஜி.. 5 ரன்னை தாண்டாத விராட் கோலி.. அட்வைஸ் சொல்லும் முகமது கைஃப்!

நியூயார்க் : இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி மீண்டும் நம்பர் 3 பேட்டிங் வரிசையில் களமிறங்க வேண்டும் என்று முன்னாள் வீரர் முகமது கைஃப் அட்வைஸ் கூறியுள்ளார்.

ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி தொடக்க வீரராக களமிறங்கி வருகிறார். அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் ஒரு ரன்னில் ஆட்டமிழந்த விராட் கோலி, பாகிஸ்தான் அணிக்கு எதிராக 4 ரன்களில் வெளியேறினார். கடைசியில் அமெரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோலி டக் அவுட்டாகினார்.

t20 world cup indian national cricket team cricket 20 2024

3 போட்டிகளில் ஒற்றை இலக்க ரன்களில் விராட் கோலி வெளியேறியதால், ரசிகர்கள் பலரும் விமர்சிக்க தொடங்கியுள்ளனர். ஐபிஎல் தொடரில் சிறந்த ஃபார்மில் இருந்த விராட் கோலி தடுமாறி வருவது இந்திய அணிக்கும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் டி20 உலகக்கோப்பை தொடரில் விராட் கோலி முதல்முறையாக டக் அவுட்டாகி வெளியேறி இருக்கிறார்.

இதுகுறித்து இந்திய முன்னாள் வீரர் முகமது கைஃப் பேசுகையில், இந்திய அணியின் விராட் கோலி மீண்டும் நம்பர் 3 வரிசையில் களமிறங்க வேண்டும். ஏனென்றால் நம்பர் 3ல் வந்து ஏராளமான சாதனைகளை விராட் கோலி படைத்துள்ளார். இந்த பிட்ச்கள் வேகப்பந்துவீச்சிற்கு சாதகமாக அமைக்கப்பட்டுள்ளன. இதனை எதிர்த்து விளையாடுவது எளிதான காரியமல்ல. அதனால் விராட் கோலிக்கு கூடுதல் நேரம் தேவையாக உள்ளது. அவர் வெளியில் அமர்ந்து பவுலர்கள் மற்றும் பிட்சில் கணிப்பதற்கு சரியாக இருக்கும்.

சவுரப் நெட்ரவால்கர் பவுலிங்கில் விராட் கோலி விளையாடியதில்லை. அவர் வீசிய முதல் பந்திலேயே ட்ரைவ் விளையாட முயன்று விக்கெட்டை பறிகொடுத்தார். ஆனால் நம்பர் 3ல் களமிறங்கினால், பவுலர்கள் மற்றும் பிட்சை புரிந்து கொள்வதற்கு நேரம் கிடைக்கும். ஐபிஎல் தொடரில் விராட் கோலி தொடக்க வீரராக களமிறங்கி சிறப்பாக விளையாடினார் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் ஐபிஎல் தொடரில் அமைக்கப்பட்ட பிட்ச்கள் பிளாட்டானது.

ஒவ்வொரு போட்டியிலும் எளிதாக 200 ரன்கள் விளாசப்பட்டது. விராட் கோலி தொடக்க வீரராக களமிறங்கி 80 முதல் 90 ரன்களை அசால்ட்டாக விளாசி வந்தார். அதன் காரணமாகவே விராட் கோலி மீண்டும் தொடக்க கொடுக்க முன் வந்துள்ளார். ஆனால் இங்கு பிட்ச்கள், சூழல் வேறு மாதிரி அமைந்துள்ளது. பந்து வீசும் போது நல்ல ஸ்விங் இருக்கிறது. ஆட்டத்தில் 3 அல்லது 4 ஓவர்களுக்கு பின் விராட் கோலி களமிறங்கி கடைசி வரை களத்தில் இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Story first published: Friday, June 14, 2024, 15:00 [IST]
Other articles published on Jun 14, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+