Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs ENG: முதல் ஒருநாள் போட்டி இந்திய அணியில் 3 ஆல் ரவுண்டர்கள்.. 3 ஆண்டுகளுக்கு பின் பும்ரா

பிர்மிங்காம்: இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் 0- 4 என்ற கணக்கில் படுதோல்வியை தழுவியது. இந்த சூழலில் மூன்று ஒரு நாள் போட்டி கொண்ட தொடர் இன்று பர்மிங்காமில் தொடங்குகிறது.

விராட் கோலி, ரோகித் சர்மா, ராகுல் போன்ற சீனியர் வீரர்கள் திரும்பி இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் உற்சாகம் ஏற்பட்டிருக்கிறது. இந்த சூழலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஹாரி புரூக், முதலில் தேர்வு செய்துள்ளார்.

Ind vs Eng 1st ODI

ஆடுகளம் பார்ப்பதற்கு நன்றாக இருப்பதாகவும் ரன்குவிக்க சாதகமாக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். பிற்பகுதியில் சுழற்பந்துவீச்சை பயன்படுத்தி வெற்றியைப் பெற முயற்சிப்போம் என்று கூறியுள்ளார். இதனை தொடர்ந்து பேசிய இந்திய அணி கேப்டன் கில், நாங்கள் முதலில் பந்து வீச தான் இருந்தோம். எனவே எங்களுக்கு பிரச்சனை இல்லை.

எங்கள் அணியில் பல வீரர்கள் டி20-ல் இங்கு விளையாடினார்கள். நாங்கள் சிறு ஓய்வுக்கு பிறகு திரும்பி இருக்கின்றோம். நாங்கள் இரண்டு நாட்கள் இங்கு பயிற்சி செய்தோம். எனவே ஆடுகளம் எவ்வாறு செயல்படுகிறது என்று எங்களுக்கு நன்றாக தெரியும்.

இந்த தொடர் மிகவும் முக்கியமானது. ஏனென்றால் தென்னாப்பிரிக்காவில் உலக கோப்பை நடைபெற உள்ளது. அங்கு இருக்கும் ஆடுகளம் போல் தான் இங்கேயும் ஆடுகளம் செயல்படும். எங்கள் அணியில் பல சீனியர் வீரர்கள் திரும்பி இருக்கிறார்கள். இங்கிலாந்தில் விளையாடும் போது அனுபவம் மிகவும் முக்கியம், இந்த தொடர் எனக்கு மிகவும் உற்சாகத்தை கொடுத்திருக்கின்றது.

எங்கள் அணியில் சிவம் துபேவை சேர்த்து நான்கு வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். சுழற் பந்துவீச்சாளர்களாக அக்சர் பட்டேல், வாஷிங்டன் சுந்தர் உள்ளனர் என்று கில் தெரிவித்துள்ளார். இந்திய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளரான பும்ரா, 3 ஆண்டுகளுக்கு பிறகு ஒருநாள் கிரிக்கெட்டுக்கு திரும்பியுள்ளார். இதே போன்று இந்த எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் கடைசியாக நடைபெற்ற 7 ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணியே வெற்றி பெற்றுள்ளது.

Story first published: Tuesday, July 14, 2026, 15:31 [IST]
Other articles published on Jul 14, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+