Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs ENG ODI: பிளேயிங் 11இல் மேட்ச் வின்னருக்கு இடமில்லை.. கம்பீர் எடுக்கப்போகும் அதிரடி முடிவு

பர்மிங்காம்: இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி ஜூலை 14 அன்று நடைபெற உள்ள நிலையில், இந்திய அணியின் பிளேயிங் 11 தேர்வில் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் எடுக்கப்போகும் ஒரு முக்கிய முடிவு எடுக்கப் போவதாக கூறப்படுகிறது.

விராட் கோலி மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் மீண்டும் ஒருநாள் அணிக்குத் திரும்பினாலும், ஒரு முக்கிய மேட்ச் வின்னர் அணியில் இருந்து நீக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. ஆல்-ரவுண்டர்களான ஹர்திக் பாண்டியா மற்றும் நிதிஷ் ரெட்டி ஆகியோர் காயம் காரணமாக இந்தத் தொடரில் விளையாடவில்லை. இதனால் இந்திய அணியின் பேட்டிங் ஆழத்தை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் கம்பீருக்கு ஏற்பட்டுள்ளது.

IND vs ENG 1st ODI Playing XI Virat Kohli Rohit Bumrah Shivam Dube in Kuldeep Set to Be Dropped

பேட்டிங் செய்யத் தெரியாத குல்தீப் யாதவை அணியில் சேர்த்தால், இந்தியாவின் பேட்டிங் 7வது வீரருடனேயே முடிவுக்கு வந்துவிடும். இதனைத் தவிர்க்க, பந்துவீச்சிலும் பேட்டிங்கிலும் உதவக்கூடிய ஆல்-ரவுண்டர் வாஷிங்டன் சுந்தரை பிளேயிங் லெவனில் அணியில் சேர்க்க கம்பீர் திட்டமிட்டுள்ளார். வாஷிங்டன் சுந்தர் சேர்க்கப்பட்டால், இந்தியாவின் பேட்டிங் 8வது வீரர் வரை நீடிக்கும்.

மேலும், அக்சர் பட்டேல், சிவம் துபே ஆகியோருக்கும் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இதற்குப் பலியாகப் போவது இந்தியாவின் முதன்மை சுழற்பந்து வீச்சாளரான குல்தீப் யாதவ் தான். கம்பீரின் இந்தத் திட்டம் பந்துவீச்சைக் காட்டிலும் பேட்டிங் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் விதமாக அமைந்துள்ளது.

பேட்டிங் வரிசையில் ரோஹித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி ஆகியோர் டாப் ஆர்டரிலும், ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், அக்சர் படேல் , சிவம் துபே ஆகியோர் மிடில் ஆர்டரிலும் களம் இறங்குவார்கள். பந்துவீச்சை பொறுத்தவரை ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங் மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோர் வேகப்பந்து வீச்சை வழிநடத்துவர்.

இந்தியா - இங்கிலாந்து ஒருநாள் தொடர் மூன்று போட்டிகள் எப்போது? அட்டவணை, ஒளிபரப்பு விவரம்

இந்தியா - இங்கிலாந்து ஒருநாள் தொடர் மூன்று போட்டிகள் எப்போது? அட்டவணை, ஒளிபரப்பு விவரம்

இந்திய அணி - உத்தேச பிளேயிங் 11: ரோஹித் சர்மா, சுப்மன் கில் (கேப்டன்), விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், கேஎல் ராகுல், சிவம் துபே, ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா.

Story first published: Tuesday, July 14, 2026, 8:10 [IST]
Other articles published on Jul 14, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+