IND vs ENG: முதல் டி20-யில் மழை பாதிக்குமா? ஆடுகளம் எப்படி இருக்கும்? டாஸ் வென்றால் என்ன செய்யனும்?
செஸ்டர் லீ ஸ்டிரிட்: இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர் இன்று முதல் தொடங்குகிறது. நடப்பு உலக சாம்பியனான இந்திய அணி, அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரில் 2-0 என்ற கணக்கில் மோசமான தோல்வியைத் தழுவியது. இதனால் ஏற்பட்ட காயத்திற்கு மருந்தாக பலம் வாய்ந்த இங்கிலாந்தை அதன் சொந்த மண்ணில் வீழ்த்த வேண்டும் என்ற உத்வேகத்தில் இந்திய அணி, இந்திய அணி, இங்கிலாந்திற்குப் பயணம் மேற்கொண்டுள்ளது.
அங்கு ஹாரி புரூக் தலைமையிலான இங்கிலாந்து அணியை இந்தியா எதிர்கொள்கிறது. இதுவரை எந்த இந்திய கேப்டனும், பொறுப்பேற்ற முதல் 3 போட்டிகளில் தொடர்ச்சியாக தோற்றது இல்லை. இதனால், இந்த மோசமான சாதனையை தவிர்க்க வேண்டும் என்ற உத்வேகத்தில் ஸ்ரேயாஸ் தலைமையிலான இந்திய அணி களமிறங்கும்.

வைபவ் சூர்யவன்ஷியின் அறிமுகப் போட்டி குறித்து இந்திய அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் மௌனம் காத்து வந்தாலும், அவர் விளையாடும் வரை இதைப் பற்றிய பேச்சுகள் ஓய்வதாக இல்லை. அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்த விதம், செவ்வாய்க்கிழமை நடைபெறவிருக்கும் இங்கிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில் சூர்யவன்ஷி களமிறங்குவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளது. ஆனால்,அவருக்கு தடையாக இருக்கப்போவது மழைதான்.
போட்டி நடைபெறும் செஸ்டர் லீ ஸ்டிரிட் வானம் பெரும்பாலும் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், அதிகபட்ச வெப்பநிலை 21 டிகிரி செல்சியஸாக இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. மேலும் மழை பெய்வதற்கான வாய்ப்பு 35% ஆக உள்ளது. பிபிசி வானிலை அறிக்கையின்படி, மதியம் 2:00 மணி (இந்திய நேரப்படி மாலை 6:30 மணி) முதல் அதிகாலை 3:00 மணி (இந்திய நேரப்படி காலை 7:30 மணி) வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. இப்போட்டி இந்திய நேரப்படி இரவு 10:00 மணிக்குத் தொடங்கி, அதிகாலை 2:00 மணி வரை நடைபெறலாம் என்பதால், மழையினால் போட்டி தாமதமாகத் தொடங்குவதற்கு அதிக வாய்ப்புள்ளது.
இங்கிலாந்தில் மேகமூட்டமான வானிலை பொதுவாக வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும். இது இரவு நேரப் போட்டி என்பதால், நேரம் செல்லச் செல்ல வெப்பநிலை குறையும். மழை பெய்யாத பட்சத்தில், இரண்டாவது இன்னிங்ஸின் போது பனிப்பொழிவு இருக்கக்கூடும்.
இந்த மைதானம் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு ஆகிய இரண்டிற்கும் சமமான ஆதரவை வழங்கக்கூடியது. ஆட்டத்தின் தொடக்கத்தில் பேட்டர்கள் பந்தின் பவுன்ஸை நம்பி விளையாடலாம், அதே நேரத்தில் புதிய பந்தில் சீம் பந்துவீச்சாளர்கள் ஓரளவுக்கு ஸ்விங் செய்ய முடியும். இந்த மைதானத்தில் கடந்தகால டி20 போட்டிகளின் ஸ்கோர்கள் 122 ரன்கள் முதல் அதிகபட்சமாக 211 ரன்கள் வரை பதிவாகியுள்ளன. வரலாற்று ரீதியாக, இந்த மைதானத்தில் இரண்டாவது பேட்டிங் செய்து சேஸிங் செய்யும் அணிகளே அதிக வெற்றிகளைப் பெற்றுள்ளன.


Click it and Unblock the Notifications

