Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs ENG: ரசிகர்களை தொடர்ந்து வெறுப்பேற்றும் சஞ்சு சாம்சன்.. இதுக்கு இல்லையா சார் ஒரு எண்ட்

துர்ஹாம்: இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் சஞ்சு சாம்சன் மீண்டும் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்து ரசிகர்களை வெறுப்பேற்றி இருக்கிறார். டி20 உலக கோப்பையை இந்திய அணி வெல்வதற்கு சஞ்சு சாம்சன் முக்கிய காரணமாக இருந்தார்.

டி20 உலக கோப்பையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ஆட்டமிழக்காமல் 97 ரன்கள், அரையிறுதியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக 89 ரன்களும் இறுதிப்போட்டியில் மீண்டும் நியூசிலாந்துக்கு எதிராக 89 ரன்களும் என சஞ்சு சாம்சன் பட்டையை கிளப்பினார்.

Sanju samson

அது மட்டும் இல்லாமல் டி20 உலக கோப்பையில் ஒரே சீசனில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர் என்ற பெருமையும் அவர் பெற்றார். தொடர் நாயகன் விருதையும் சஞ்சு சாம்சன் தனதாக்கினார். சாம்சன் அடித்தால் சதம் இல்லை என்றால் 10 ரன்களுக்கு ஆட்டம் இழப்பு என்ற ரேஞ்சில் தொடர்ந்து விளையாடி வருகிறார்.

தற்போது வாய்ப்புக்காக வைபவ் சூர்யவன்சி உள்ளிட்ட இளம் ஸ்டார் வீரர்கள் காத்துக் கொண்டு இருக்கிறார்கள். இந்த தருணத்தில் சஞ்சு சாம்சன் மீது கடும் நெருக்கடி ஏற்பட்டு இருக்கிறது. அயர்லாந்துக்கு எதிராக ஐந்து ரன்கள் மற்றும் டக் அவுட் ஆகி வெளியேறிய சஞ்சு சாம்சன் மீது அழுத்தம் அதிகரித்து இருக்கிறது.

இந்த சூழலில் இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் அவர் மீண்டும் ரன் குவித்து சாதிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 7 பந்துகளை எதிர் கொண்டு வெறும் 1 ரன் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்திருக்கிறார். இது ரசிகர்களை மேலும் கோபம் அடைய செய்திருக்கிறது. சாம்சன் கிடைக்கும் வாய்ப்பு வீணடித்து வருவதாகவும், உலகக்கோப்பை வென்றுவிட்டார் என்பதற்காக தொடர்ந்து அவருக்கு வாய்ப்பு கொடுக்க முடியாது என்றும் ரசிகர்கள் குறை கூறி வருகின்றனர்.

ஐபிஎல் போட்டிகள் கூட சாம்சன் சிஎஸ்கே அணிக்காக விளையாடிய போது இதே போல் ஒரு ஆட்டத்தை தான் வெளிப்படுத்தி வந்தார். அதாவது அடித்தால் சதம் இல்லை என்றால் டக் அவுட் என்ற ரேஞ்சுக்கு அவர் விளையாடி வந்தார். 14 போட்டிகளில் இரண்டு சதம், ஒரு அரை சதம் என 477 ரன்கள் குவித்தாலும் ,மற்ற போட்டிகளில் தடுமாறினார்.

சஞ்சு சாம்சன் சதம் அடிக்கும் வீரராக இருந்தாலும் இப்படி பெரும்பான்மையான போட்டிகளில் 10 கூட தாண்டவில்லை என்றால் அது எப்படி நியாயம் ஆகும் என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். குறைந்தபட்சம் சாம்சன் 20 ,30 ரன்கள் அடித்து நல்ல தொடக்கத்தை கொடுப்பதை அவருடைய பணி என்றும் டி20 உலக கோப்பையில் வென்ற கேப்டன் சூரியகுமாரே நீக்கப்பட்ட சூழலில் சாம்சன் இடமும் ஆபத்தில் இருப்பதை உணர்ந்து விளையாட வேண்டும் என்று ரசிகர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Story first published: Wednesday, July 1, 2026, 22:36 [IST]
Other articles published on Jul 1, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+