Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs ENG 1st T20: மழை பெய்ய வாய்ப்பு உள்ளதா? வானிலை அறிக்கை யாருக்கு சாதகமாக உள்ளது?

கொல்கத்தா: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் விளையாட உள்ள முதல் டி20 போட்டிக்கான வானிலை அறிக்கை வெளியாகி உள்ளது. இந்தப் போட்டி நடைபெறும் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் போட்டி நேரத்தில் மழை பெய்யுமா? என்ற கேள்வி உள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளன. இந்த தொடரின் முதல் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற உள்ளது. இன்று நடைபெற உள்ள இந்த போட்டியின் போது மழை பெய்வதற்கான வாய்ப்பு மிகவும் குறைவாகவே உள்ளதாக வானிலை அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

IND vs ENG 1st T20I Weather report Rain cannot be expected in Kolkata Eden Garden during the match

போட்டி நேரத்தில் 7 சதவீதம் மட்டுமே மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது என நிபுணர்கள் கூறி உள்ளனர். இது போன்ற குறைந்த சதவீதம் இருக்கும் சூழ்நிலைகளில் பெரும்பாலும் மழை பெய்யாது. மேலும், போட்டி நேரத்தில் மூன்று சதவீதம் மட்டுமே வானம் மேகமூட்டத்துடன் இருக்கும். அதிகபட்சமாக 28 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்சமாக 16 டிகிரி செல்சியஸ் என்ற வெப்பநிலை இருக்கும்.

எனவே, போட்டி நடைபெறும் இரவு நேரத்தில் லேசான பனிப்பொழிவு இருக்கும் என எதிர்பார்க்கலாம். அது இரண்டாவதாக பவுலிங் செய்யும் அணிக்கு சிக்கலை ஏற்படுத்தும். குறிப்பாக சுழற் பந்துவீச்சாளர்களுக்கு பந்தை வீசுவதில் சிரமம் ஏற்படும். அதே சமயம், மழை பெய்யாது என்பதால் இந்த போட்டி முழுமையாக நடைபெறும் என எதிர்பார்க்கலாம்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் கடைசியாக 2024 டி20 உலகக் கோப்பையின் அரை இறுதிப் போட்டியில் விளையாடி இருந்தன. அந்தப் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 171 ரன்கள் சேர்த்தது. அடுத்த ஆடிய இங்கிலாந்து அணி 103 ரன்களுக்கு ஆட்டம் இழந்து இருந்தது. இந்திய அணி 68 ரன்கள் வித்தியாசத்தில் அந்தப் போட்டியில் வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறி உலகக் கோப்பையை வென்று இருந்தது. அதன் பின் தற்போது இரண்டு அணிகளும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளன.

Story first published: Wednesday, January 22, 2025, 11:38 [IST]
Other articles published on Jan 22, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+