Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்.. 48 மணி நேரத்திற்கு முன்பே பிளேயிங் லெவனை அறிவித்த இங்கிலாந்து

லீட்ஸ்: இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் வெள்ளிக்கிழமை லீட்ஸ் நகரில் நடைபெற இருக்கின்றது. இந்த போட்டி தொடங்க 48 மணி நேரம் உள்ள நிலையில், இங்கிலாந்து அணி அதற்குள் தங்களுடைய பிளேயிங் லெவனை அறிவித்திருக்கிறது.

இதன் மூலம் தாங்கள் இந்தியாவுக்கு எதிராக நம்பிக்கையுடன் இருக்கின்றோம் என்பதை காண்பித்து இருக்கின்றது. தொடக்க வீரராக ஜாக் கிராலி மற்றும் பென் டக்கட் ஆகியோர் செயல்படுவார்கள். இருவருமே டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிரடியாக ஆடக்கூடியவர்கள்.

Ind vs eng

இந்த ஜோடி நிச்சயம் இந்தியாவுக்கு கடும் நெருக்கடியை கொடுக்கும். இதைப் போன்று நம்பர் மூன்றாவது வீரராக உள்ள ஒலி போப், நல்ல பார்மில் இருக்கின்றார். நான்காவது வீரராக ஜோ ரூட் களமிறங்க உள்ளார். ஜோ ரூட், எப்போதுமே இந்தியாவுக்கு எதிராக அதிக ரன்கள் குவித்து இருக்கின்றார்.

அதேபோன்று ஐந்தாவது வீரராக அதிரடி நாயகன் ஹாரி புரூக் சேர்க்கப்பட்டிருக்கிறார். இங்கிலாந்து டி20 மற்றும் ஒரு நாள் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ள ஹரி புரூக், டெஸ்ட் கிரிக்கெட்டில் ஏற்கனவே தன்னுடைய திறமையை நிரூபித்து இருக்கின்றார்.
அதேபோன்று ஆறாவது வீரராக ஆல்ரவுண்டர் மற்றும் கேப்டனுமான பென் ஸ்டோக்ஸ் அறிவிக்கப்பட்டிருக்கின்றார்.

ஏழாவது வீரராக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஜெமிஸ்மித் இடம் பெற்றுள்ளார். இந்த வகையில் இங்கிலாந்து அணியில் டாப் ஏழு வீரர்களும் பலம் வாய்ந்தவர்களாக இருக்கின்றார்கள். இதை அடுத்து எட்டாவது வீரராக ஆல் ரவுண்டர் கிறிஸ் வொக்ஸ் சேர்க்கப்பட்டிருக்கின்றார். டிசம்பர் மாதம் காயம் காரணமாக அணியை விட்டு வெளியேறிய நிலையில் கிறிஸ் வொக்ஸ் தற்போது ஆறு மாதம் இடைவெளி பிறகு மீண்டும் அணிக்கு திரும்பியிருக்கின்றார்.

இதேபோன்று இங்கிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள் இரண்டு பேரும் அனுபவம் குன்றியவர்களாக உள்ளனர். பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்தில் ஐந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய இங்கிலாந்து வீரர் பிரைடன் கர்ஸ், தற்போது முதல் முறையாக தனது சொந்த மண்ணில் சர்வதேச டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளார். இதேபோன்று ஜோஸ் டங்கும் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.

இவர் ஏற்கனவே இந்திய அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் முதல் இன்னிங்சில் 91 ரன்களை விட்டுகொடுத்து 2 விக்கெட்டை வீழ்த்தினார். இரண்டாவது இன்னிங்சில் விக்கெட் இழப்பின்றி 37 ரன்கள் எடுத்துள்ளது. இதேபோன்று 11வது வீரராக சுழற் பந்துவீச்சாளர் இடம் பெற்றுள்ளார். இங்கிலாந்து அணியின் பேட்டிங் பலம் வாய்ந்தவராக இருந்தாலும் பந்து வீச்சு அனுபவம் இன்றி காணப்படுகிறது.

இங்கிலாந்து பிளேயிங் லெவன்: 1. ஷாக் கிராலி, 2, பென் டக்கட், 3, ஓலி போப், 4, ஜோ ரூட், 5, ஹாரி புரூக், 6, பென் ஸடோக்ஸ், 7, ஜெமி ஸ்மித், 8, கிறிஸ் வொக்ஸ், 9, ஜோஸ் டங், 10, பிரைடன் கர்ஸ், 11, சோயிப் பஷிர்

Story first published: Wednesday, June 18, 2025, 20:42 [IST]
Other articles published on Jun 18, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+