Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs ENG: இந்திய அணியின் பிளேயிங் லெவன்.. முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்த்ரி கணிப்பு

லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான இந்தியாவின் முதல் டெஸ்ட் போட்டிக்கான தனது 11 வீரர்கள் கொண்ட அணியை முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்த்ரி தேர்வு செய்துள்ளார். ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய அணியில் 18 பேர் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

இது குறித்து பேசிய ரவி சாஸ்த்ரி, "தொடக்கத்தில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இருப்பார், அவருடன் கே.எல். ராகுல் இருப்பார், ஏனெனில் இது அவருக்கு மிக முக்கியமான சுற்றுப்பயணம் என்று நினைக்கிறேன். அவர் பேட்ஸ்மேன்களில் மிகவும் அனுபவமிக்கவர். கடந்த முறை இந்தியா இங்கிலாந்து சுற்றுப்பயணம் சென்றபோது அவர் தொடக்க வீரராக விளையாடி, ஒரு சதம் அடித்து, நல்ல சுற்றுப்பயணத்தை அமைத்தார்."

Ravi shastri

"எனவே, அவர் தொடக்கத்தில் விளையாட வேண்டும் என்று நம்புகிறேன். மூன்றாவது இடத்தில், இளம் வீரர் சாய் சுதர்ஷனை தேர்வு செய்வேன். நான் அவரைப் பார்த்த வரையில், அவர் மிகவும் ஈர்க்கக்கூடிய வீரர். இந்த சுற்றுப்பயணம் அவருக்கு நல்ல அனுபவத்தை அளிக்கும்,"

"தற்போதைய பார்மை பொறுத்தவரை, கருண் நாயர் இருப்பார். அவர் ஐந்தாவது இடத்தில் பேட்டிங் செய்வார், அவர் இந்தியாவுக்காக விளையாடி நீண்ட நாட்கள் ஆகிவிட்டன. ஆறாவது இடத்தில் ரிஷப் பந்த் இருப்பார். நாயர் மிகவும் கடினமாக உழைத்துள்ளார். அவர் மீண்டும் அணியில் இடம் பிடித்துள்ளார். முதல் தர கிரிக்கெட்டில் அவர் பெற்ற ரன்களின் எண்ணிக்கை ஆச்சரியமளிக்கிறது,"

"ஐபிஎல் போட்டியின்போது நான் அவரை சந்தித்தேன். 'கதவை தட்டுவது மட்டும் போதாது, அதை உடைத்து உள்ளே நுழைந்து அணியில் இடம் பிடி' என்று கூறினேன். அவர் அதைச் செய்துவிட்டார். அவர் பெற்ற ரன்களின் எண்ணிக்கை தேர்வுக்குழுவினரை அந்தப் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்து, அவருக்கு இடம் அளித்துள்ளது,"

"மூன்று வேகப்பந்து வீச்சாளர்களாக, நான் பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ் மற்றும் நிச்சயமாக ஜஸ்பிரீத் பும்ராவை தேர்வு செய்வேன். லீட்ஸில், வானிலை மேகமூட்டமாக இருந்தால், இடது கை வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங்கை சேர்க்கும் ஆசை இருக்கலாம். எனவே, பிரசித் கிருஷ்ணா அல்லது அர்ஷ்தீப், ஆனால் மற்ற இருவராக சிராஜ் மற்றும் பும்ரா இருப்பார்கள்," என்று ரவி சாஸ்த்ரி கூறினார்.

ரவி சாஸ்திரி தேர்வு செய்த பிளேயிங் லெவன்:
யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல். ராகுல், சாய் சுதர்ஷன், ஷுப்மன் கில் (கேப்டன்), கருண் நாயர், ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், பிரசித் கிருஷ்ணா/அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரீத் பும்ரா, முகமது சிராஜ்

Story first published: Tuesday, June 17, 2025, 22:34 [IST]
Other articles published on Jun 17, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+