IND vs ENG - நல்லா ஆடிக்கிட்டு இருந்தாரு..சதத்தை தவறவிட்ட கேஎல் ராகுல்.. 300 ரன்களை கடந்த இந்தியா
ஐதராபாத் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விராட் கோலி இடத்தில் களமிறங்கிய நட்சத்திர வீரர் கே எல் ராகுல் 14 ரன்களின் சதத்தை தவறவிட்டார். 5 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரை முதல் டெஸ்ட் போட்டி ஹைதராபாத்தில் நேற்று தொடங்கியது.
இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. இதில் பென் ஸ்டோக்ஸ் அபாரமாக விளையாடி 70 ரன்கள் சேர்க்க இங்கிலாந்து அணி 246 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து களமிறங்கிய இந்திய அணியின் ஜெய்ஸ்வால் மற்றும் ரோகித் சர்மா ஜோடி அபாரமாக விளையாடி முதல் விக்கெட்டுக்கு 80 ரன்கள் சேர்த்தனர்.

ரோகித் சர்மா 24 ரன்களில் ஆட்டம் இழக்க அபாரமாக விளையாடிய ஜெய்ஸ்வால் 80 ரன்களில் வெளியேறினார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கில் 23 ரன்கள் மட்டுமே சேர்த்தார். இதனை அடுத்து நான்காவது விக்கெட்டுக்கு விராட் கோலி இடத்தில் கே.எல். ராகுல் களமிறங்கினார்.
கே எல் ராகுல் தன்னுடைய இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை சுலபமாக எதிர்கொண்டார். கே எல் ராகுல் ஒரு நாள் கிரிக்கெட் போல் கொஞ்சம் வேகமாகவும் ரன் சேர்த்தார். இதனால் இந்திய அணியின் ஸ்கோர் கடகடவென உயர்ந்தது. கே எல் ராகுலை கட்டுப்படுத்த இங்கிலாந்து வீரர்கள் எடுத்த எந்த முயற்சியும் பலன் அளிக்கவில்லை.
கேஎல் ராகுல் அரைசதம் கடந்தும் சிறப்பாக விளையாடி வந்த நிலையில் அவர் மிகப்பெரிய சதத்தை பூர்த்தி செய்வார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
அவருக்கு துணையாக நின்ற ஸ்ரேயாஸ் ஐயர் 35 ரன்கள் சேர்த்தார். கேஎல் ராகுல் 86 ரன்கள் எடுத்த நிலையில் 16 ரன்கள் வித்தியாசத்தில் சதத்தை தவறவிட்டார். கே எல் ராகுல் இந்த இன்னிங்ஸில் 8 பவுண்டர்களும் இரண்டு சிக்ஸர்களும் அடங்கும்.
எனினும் அதன் பிறகு களம் இறங்கிய ஜடேஜா நல்ல ஒரு இன்னிங்ஸை வெளிப்படுத்தி வரும் நிலையில் இந்திய அணி 300 ரன்கள் கடந்து விளையாடி வருகிறது.
இதன் மூலம் இங்கிலாந்து அணியின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை விட இந்தியா 50 ரன்கள் அதிகம் அடித்திருக்கிறது. இங்கிலாந்தை விட ஒரு 150 ரன்கள் முன்னிலை பெற்றால் இந்திய அணி நிச்சயம் இந்த டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற அதிக வாய்ப்பு இருக்கிறது.


Click it and Unblock the Notifications