For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஒரே போட்டியில் இவ்வளவு சர்ப்ரைசா.. புதிய சாதனை படைக்கவிருக்கும் இந்திய வீரர்கள்.. ரசிகர்கள் ஆவல்!

ட்ரெண்ட்ஸ் பிரிட்ஜ்: இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய வீரர்கள் பல்வேறு புதிய மைல்கல்களை எட்டி சாதனை படைக்கவுள்ளனர்.

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது.

இந்த டெஸ்ட் தொடர் இன்று முதல் செப்டம்பர் 14ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதற்கான இறுதிகட்ட ஏற்பாடுகளில் இரு அணிகளும் ஈடுபட்டுள்ளது.

இங்கிலாந்து டெஸ்ட்

இங்கிலாந்து டெஸ்ட்

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி தோல்விக்கு பின்னர் இந்த போட்டி நடைபெறவிருக்கிறது. இதுமட்டுமல்லாமல் இங்கிலாந்து தொடர் இந்திய அணிக்கு அடுத்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியாக இது உள்ளது. எனவே இதில் வெற்றி பெறுவதற்கு அணியில் என்னென்ன செய்ய வேண்டும் என்ற பேச்சுக்கள் எழத்தொடங்கியுள்ளது.

கேப்டன் கோலி

கேப்டன் கோலி

இந்திய அணிக்காக விராட் கோலி இன்னும் ஒரு வெற்றியை பெற்றுகொடுத்தால், உலகில் அதிக டெஸ்ட் வெற்றிகளை பெற்றுகொடுத்த கேப்டன் என்ற பெருமையை பெறுவார். தற்போது கோலி மற்றும் வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் கேப்டன் க்ளைவ் ல்யாட் ஆகியோர் தலா 36 வெற்றிகளுடன் சமநிலையில் உள்ளனர். இதே போல இந்திய அணி கேப்டன் விராட் கோலி இன்னும் 125 ரன்கள் எடுத்தால் சர்வதேச கிரிக்கெட்டில் 23,000 ரன்களை கடப்பார். அதிவேகமாக 23000 ரன்களை கடந்த வீரர் என்ற பெருமையையும் பெறுவார்.

ஜடேஜாவுக்கான வாய்ப்பு

ஜடேஜாவுக்கான வாய்ப்பு

இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா இன்னும் 15 ரன்களை எடுத்தால் டெஸ்ட் போட்டிகளில் 2000 ரன்களை கடப்பார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 200 விக்கெட்டுகள் மற்றும் 2000 ரன்களை கடந்த 5வது இந்தியர் என்ற சாதனையை அவர் பெறுவார்.

 அஸ்வின் மைல்கல்

அஸ்வின் மைல்கல்

சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின் அசைக்க முடியாத பல சாதனைகளை படைத்து வருகிறார். அவர் இங்கிலாந்து டெஸ்டில் இன்னும் 5 விக்கெட் எடுத்தால் இந்தியாவுக்காக அதிக விக்கெட்டுகள் எடுத்த சுழற்பந்துவீச்சாளர்கள் பட்டியலில் ஹர்பஜன் சிங்கை (417) முந்தி 2வது இடத்தைப் பிடிப்பார். அஸ்வின் தற்போது 413 டெஸ்ட் விக்கெட்டுகளை எடுத்துள்ளார். முதலிடத்தில் 619 விக்கெட்டுகளுடன் அனில் கும்ப்ளே நீடிக்கிறார்.

 இங்கிலாந்துக்கான வாய்ப்பு

இங்கிலாந்துக்கான வாய்ப்பு

இங்கிலாந்து தரப்பில் பார்த்தால், அந்த அணியின் கேப்டன் ஜோ ரூட் இன்னும் ஒரு டெஸ்ட் வெற்றியை பெற்றுக்கொடுத்தால் இங்கிலாந்துக்காக அதிக டெஸ்ட் வெற்றிகளை பெற்றுக்கொடுத்த கேப்டன்களில் மைக்கேல் வாகனை முந்துவார் (26). தற்போது ஜோ ரூட் 25 வெற்றிகளை பெற்றுக்கொடுத்துள்ளார்.

ஆண்டர்சன்

ஆண்டர்சன்

இங்கிலாந்தின் சீனியர் வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் (617) இன்னும் 3 விக்கெட்களை கைப்பற்றினால், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்கள் எடுத்த பவுலர்களின் பட்டியலில் அனில் கும்ப்ளேவை (619) முந்தி 3வது இடத்தை பிடிப்பார். முதலிடத்தில் முத்தையா முரளிதரன் 800 விக்கெட்களுடனும், 2வது இடத்தில் ஷேன் வார்னே 708 விக்கெட்டுகளுடனும் உள்ளனர்.

இளம் ரத்தம்

இளம் ரத்தம்

இதே போல இங்கிலாந்து இளம் வீரர் சாம் கரண் இன்னும் 6 விக்கெட்டுகளை எடுத்தால் சர்வதேச டெஸ்டில் 50 விக்கெட்டுகளை கடப்பார். இதே போல டாம் சிப்லே இன்னும் 15 ரன்கள் அடித்தால் டெஸ்ட் கிரிக்கெட்டில் 1000 ரன்களை எடுப்பார்.

Story first published: Wednesday, August 4, 2021, 17:32 [IST]
Other articles published on Aug 4, 2021
English summary
Stats Preview: Virat Kohli, Ravindra Jadeja, Ashwin eye for big records in Ind vs Eng 1st Test
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+