Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs ENG 2nd ODI வானிலையில் ட்விஸ்ட்.. டாஸ் வென்றால் என்ன தேர்வு செய்ய வேண்டும்? பிட்ச் ரிப்போர்ட்

கட்டாக்: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டிக்கான பிட்ச் மற்றும் வானிலை பற்றிய தகவல்களை இங்கே பார்க்கலாம். டாஸ் வெல்லும் அணி பேட்டிங்கை தேர்வு செய்யுமா? அல்லது பந்துவீச்சை தேர்வு செய்யுமா? என்றும் பார்க்கலாம்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோத உள்ள இரண்டாவது ஒருநாள் போட்டி ஒடிசா மாநிலத்தில் உள்ள கட்டாக் நகரில், பாரபத்தி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. கட்டாக்கில் பொதுவாக வானிலை தெளிவாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

ind vs eng india england

இந்த மைதானத்தில் பகல் நேரத்தில் 33 டிகிரி செல்சியஸ் வெப்பமும், இரவு நேரத்தில் 19 டிகிரி செல்சியஸ் வெப்பம் நிலவும் எனக் கூறப்படுகிறது. மழை பெய்வதற்கான வாய்ப்பு மிகக் குறைவாகவே உள்ளது. எனவே இந்தப் போட்டி முழுமையாக நடைபெறும் என எதிர்பார்க்கலாம்.

அதே சமயம் இரண்டாவது இன்னிங்சில் மின் வெளிச்சத்தின் கீழ் பந்து வீசுவது கடினமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. அப்போது பனித்துளிகள் அதிகமாக இருக்கும் என்பதால் இரண்டாவதாக பந்து வீசும் அணி சவாலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். பந்து ஈரமாகிவிட்டால் அதன் பின் சுழற் பந்துவீச்சை வீசுவதோ அல்லது ஸ்விங் பந்துகளை வீசுவதோ கடினமாகிவிடும்.

இந்த போட்டி நடைபெற உள்ள பாரபத்தி மைதானத்தின் பிட்ச் பெரும்பாலும் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும். பந்து நன்கு பவுன்ஸ் ஆகாது மேலும் பந்து மெதுவாகவே செல்லும் என கூறப்படுகிறது. இது பேட்ஸ்மேன்கள் ரன் குவிப்பதற்கு சவாலாக இருக்கும்.

இந்த மைதானத்தில் முதலில் பேட்டிங் செய்யும் அணி சராசரியாக 226 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளன. இதுவே பேட்ஸ்மேன்களுக்கு எவ்வளவு சிரமமானது என்பதை உணர்த்துகிறது. மேலும் இங்கு டாஸ் வெல்லும் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்வதே நல்லது. ஏனெனில் முதலில் பிட்ச் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும். அதன் பின்னர் இரண்டாவதாக பந்து வீசுவது சிரமமாக இருக்கும்.

இந்திய அணியில் நான்கு சுழற் பந்துவீச்சாளர்கள் விளையாடுவார்கள் என எதிர்பார்க்கலாம். ரவீந்திர ஜடேஜா, அக்சர் பட்டேல், குல்தீப் யாதவ் ஆகியோருடன் வருண் சக்கரவர்த்தி களமிறங்க அதிக வாய்ப்பு உள்ளது. டாஸ் இங்கு முக்கிய பங்கு வகிக்கும். ஒருவேளை இந்தியா இரண்டாவதாக பந்து வீச வேண்டிய நிலை ஏற்பட்டால் நான்கு சுழற் பந்துவீச்சாளர்களை வைத்துக்கொண்டு பனிப்பொழிவுக்கு மத்தியில் பந்து வீசுவது மிகவும் சிரமமாக இருக்கும். எனவே, அணித் தேர்வில் கவனமாக இருக்க வேண்டும்.

Story first published: Sunday, February 9, 2025, 9:30 [IST]
Other articles published on Feb 9, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+