Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs ENG: டாசில் இங்கிலாந்துக்கு சாதகம்.. இந்திய அணியில் முக்கிய வீரர் இல்லை

கார்டிப்: இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி t20 தொடரை 0- 4 என்ற கணக்கில் படுதோல்வியை தழுவியது. இந்த சூழலில் மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி முதல் போட்டியில் அபாரமாக விளையாடி வெற்றி பெற்றது. இந்த சூழலில் இரண்டாவது ஒருநாள் போட்டி கார்டிப் நகரில் இன்று தொடங்கியது.

இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஹாரி புரூக், முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். கார்டிஃப் நகரில் இந்திய அணி கடைசியாக விளையாடிய 4 ஒருநாள் போட்டியில் மூன்றில் வெற்றி பெற்று இருக்கிறது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் தொடரை கைப்பற்றி விடும் என்பதால், இங்கிலாந்து அணிக்கு இந்த ஆட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறி இருக்கிறது.

Ind vs Eng 2nd odi

இந்த சூழலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஹாரி புரூக், இந்த ஆடுகளத்தில் பெரிய அளவு புற்கள் இல்லை. இதனால் நாங்கள் முதலில் பந்து வீச முடிவு எடுத்து இருக்கின்றோம். எங்களுடைய திட்டங்களை சரியாக நடைமுறைப்படுத்த வேண்டும். போட்டியை கடைசிவரை கொண்டு செல்ல வேண்டும் என்று நாங்கள் நினைக்கின்றோம் என்று கூறினார்.

ஐசிசி உலககோப்பை மாற்றத்திற்கு அஸ்வின் வரவேற்பு.. ஆனால், இதை மறக்க கூடாது என கருத்து

ஐசிசி உலககோப்பை மாற்றத்திற்கு அஸ்வின் வரவேற்பு.. ஆனால், இதை மறக்க கூடாது என கருத்து

இதனை தொடர்ந்து பேசிய இந்திய அணி கேப்டன் கில், நாங்களும் முதலில் பந்து வீச தான் இருந்தோம். இருப்பினும் பரவாயில்லை. இந்த தொடர் தொடங்கிய விதம் மகிழ்ச்சியை தருகின்றது. முதல் போட்டியில் வெற்றி பெற்றது மகிழ்ச்சி. எங்களுக்கு நல்ல தொடக்கம் கிடைத்து இருக்கிறது. அதேபோல் இன்றைய ஆட்டத்திலும் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று நினைக்கின்றோம்.

எங்கள் அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள் நன்றாக செயல்பட்டார்கள். அதை பார்க்கும்போது மகிழ்ச்சியை தருகின்றது. கார்டிப் நகர் எங்களுக்கு பல நல்ல மகிழ்ச்சியான தருணங்களை தந்திருக்கிறது. எங்கள் அணியில் இன்று ஒரு மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது.

செய்றது நானு, நல்ல பேரு உனக்கா? சக தேர்வுக்குழு உறுப்பினர்கள் மீது அகர்கர், கம்பீர் கோபம்

செய்றது நானு, நல்ல பேரு உனக்கா? சக தேர்வுக்குழு உறுப்பினர்கள் மீது அகர்கர், கம்பீர் கோபம்

ராகுலுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் அவருக்கு பதிலாக இஷான் கிஷன் அணியில் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார் என்று கில் கூறினார். இங்கிலாந்து அணியில் ஜோஸ் டாங் மற்றும் லியான் டான்சன் நீக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு பதிலாக கட் கின்சன் மற்றும் சக்கியூப் முகமது அணிக்குள் வந்திருக்கிறார்கள்.

Story first published: Thursday, July 16, 2026, 17:18 [IST]
Other articles published on Jul 16, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+