Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs ENG 2nd ODI பிளேயிங் 11.. ஸ்ரேயாஸ் நிலை என்ன? வருண் சக்கரவர்த்தி, அர்ஷ்தீப் சிங் ஆடுவார்களா?

கட்டாக்: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் விளையாட உள்ள இரண்டாவது ஒருநாள் போட்டியின் பிளேயிங் லெவன் எப்படி இருக்கும்? என்று பார்க்கலாம். விராட் கோலி இந்த போட்டியில் விளையாடுவார் என கூறப்படும் நிலையில் அவருக்கு பதிலாக யாரை அணியிலிருந்து நீக்குவார்கள்? என்பது பற்றியும் பார்க்கலாம்.

இந்த தொடரின் முதல் ஒருநாள் போட்டியின் போது விராட் கோலிக்கும் முழங்காலில் வீக்கம் இருந்ததால் அவர் விளையாடவில்லை. அவருக்கு பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர் இடம் பெற்றதாக அப்போது சொல்லப்பட்டது. ஸ்ரேயாஸ் அந்த போட்டியில் 36 பந்துகளில் 59 ரன்கள் சேர்த்தார். அதனால் அவரை நீக்குவதற்கு வாய்ப்பு இல்லை.

IND vs ENG 2nd ODI Playing XI Virat Kohli in and Jaiswal Out Varun Chakravarthy may play

இரண்டாவது ஒருநாள் போட்டியில் துவக்க வீரர் ஜெய்ஸ்வாலை நீக்குவதற்கு அதிக வாய்ப்பு என கூறப்படுகிறது. சுப்மன் கில் முதல் போட்டியில் மூன்றாம் வரிசையில் ஆடி இருந்தார். அந்த இடத்தில் தான் விராட் கோலி விளையாடுவார் என்பதால் சுப்மன் கில் தனது இயல்பான பேட்டிங் வரிசையான துவக்க வீரர் என்ற இடத்தில் விளையாடுவார் என எதிர்பார்க்கலாம்.

விராட் கோலி மூன்றாம் வரிசையிலும், சுப்மன் கில் நான்காம் வரிசையிலும் விளையாடுவார்கள். பந்துவீச்சை பொறுத்த வரையில் ஜடேஜா அல்லது ஷமிக்கு ஓய்வு அளிக்கப்படலாம். அவர்கள் இருவரும் எப்படியும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடுவார்கள் என்பதால் மற்ற பந்துவீச்சாளர்களுக்கு பயிற்சி அளிக்கும் வகையிலும் அவர்களை பரிசோதனை அளிக்கும் வகையிலும் வாய்ப்பளிக்கப்படும்.

அந்த வகையில் வருண் சக்கரவர்த்தி அணியில் இடம் பெறுவார் என எதிர்பார்க்கலாம். முகமது ஷமிக்கு பதிலாக அர்ஷ்தீப் சிங் இடம் பெறவும் வாய்ப்பு உள்ளது. ஒருவேளை முகமது ஷமிக்கு அதிக போட்டி பயிற்சி தேவை என நினைத்தால் அர்ஷ்தீப் சிங்கிற்கு வாய்ப்பு கிடைக்காது.

கட்டாக்கில் நடைபெற உள்ள 2வது ஒருநாள் போட்டிக்கான இந்திய பிளேயிங் லெவன்:

ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், வருண் சக்ரவர்த்தி, ஹர்ஷித் ராணா, குல்தீப் யாதவ், முகமது ஷமி.

Story first published: Saturday, February 8, 2025, 10:10 [IST]
Other articles published on Feb 8, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+