Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs ENG: இன்னும் 3 விக்கெட் வீழ்த்தினால் போதும்.. மாபெரும் வரலாறு படைக்கப் போகும் அர்ஷ்தீப் சிங்

சென்னை: இந்திய டி20 அணியின் முன்னணி வேகப் பந்துவீச்சாளராக இருக்கும் அர்ஷ்தீப் சிங் இன்னும் 3 விக்கெட்கள் வீழ்த்தும் பட்சத்தில் உலகிலேயே விரைவாக 100 டி20 விக்கெட்களை வீழ்த்திய வேகப் பந்துவீச்சாளர் என்ற மாபெரும் சாதனையை படைப்பார். தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் அவர் விளையாடி வருகிறார்.

இந்த டி20 தொடரின் முதல் போட்டியில் அர்ஷ்தீப் சிங் இரண்டு விக்கெட்களை வீழ்த்தி இருந்தார். இந்த நிலையில் இரண்டாவது போட்டியில் அவர் மூன்று விக்கெட்களை வீழ்த்த வாய்ப்பு உள்ளது. ஒருவேளை இரண்டாவது போட்டியில் இந்த மைல்கல்லை எட்ட முடியாமல் போனாலும் இந்த தொடர் முடிவதற்குள் அவர் நிச்சயமாக 100 விக்கெட்களை வீழ்த்துவார்.

IND vs ENG 2nd T20 Arshdeep Singh will break multiple records if he took 3 wickets in Chennai Chepauk

ஒருவேளை அவர் இரண்டாவது டி20 போட்டியிலேயே அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்களை வீழ்த்தினால் அதன் மூலம் பல்வேறு சாதனைகளை செய்வார். அவற்றை பற்றி பார்க்கலாம். இரண்டாவது டி20 போட்டியில் அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்களை வீழ்த்தினால் டி20 கிரிக்கெட்டில் 100 விக்கெட்களை வீழ்த்திய முதல் இந்திய பந்து வீச்சாளர் என்ற சாதனையை செய்வார்.

மேலும், உலக அளவில் 100 டி20 விக்கெட்களை வீழ்த்திய வேகப் பந்துவீச்சாளர்கள் பட்டியலில் முதல் இடத்தை பிடிப்பார். முன்னதாக பாகிஸ்தான் அணியின் ஹாரிஸ் ரவுஃப் 71 டி20 போட்டிகளில் இந்த சாதனையை செய்து இருந்தார். தற்போது 61 போட்டிகளில் மட்டுமே ஆடி இருக்கும் அர்ஷ்தீப் சிங் தனது 62 வது போட்டியிலேயே இந்த மைல்கல்லை எட்டி அந்த சாதனையை உடைப்பார்.

மேலும், உலக அளவில் 100 விக்கெட்டுகளை விரைவாக வீழ்த்திய பந்து வீச்சாளர்கள் வரிசையில் மூன்றாவது இடத்தையும் பிடிப்பார் அர்ஷ்தீப் சிங். இதற்கு முன் ஆப்கானிஸ்தான் அணியின் ரஷித் கான் 53 போட்டிகளில் 100 டி20 விக்கெட்களை வீழ்த்தி இருந்ததே சாதனையாக உள்ளது.

சர்வதேச டி20 போட்டிகளில் வேகமாக 100 விக்கெட்களை வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர்கள் பட்டியல் -

ஹரிஸ் ரவுஃப் (பாகிஸ்தான்) - 71 போட்டிகள்
மார்க் அடேர் (அயர்லாந்து) - 72 போட்டிகள்
பிலால் கான் (ஓமன்) - 72 போட்டிகள்
ஷஹீன் ஷா அப்ரிடி (பாகிஸ்தான்) - 74 போட்டிகள்
லசித் மலிங்கா (இலங்கை) - 76 போட்டிகள்
முஸ்தாபிசுர் ரஹ்மான் (வங்கதேசம்) - 81 போட்டிகள்

சர்வதேச டி20 போட்டிகளில் அதிவேகமாக 100 விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர்கள் பட்டியல் -

ரஷித் கான் (ஆப்கானிஸ்தான்) - 53 போட்டிகள்
சந்தீப் லமிச்சேன் (நேபாளம்) - 54 போட்டிகள்
வனிந்து ஹசரங்கா (இலங்கை) - 63 போட்டிகள்
ஹரிஸ் ரவுஃப் (பாகிஸ்தான்) - 71 போட்டிகள்
எஹ்சான் கான் (ஹாங்காங்) - 71 போட்டிகள்

Story first published: Saturday, January 25, 2025, 10:39 [IST]
Other articles published on Jan 25, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+