Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs ENG: மாபெரும் சாதனை படைக்க காத்திருக்கும் அக்சர் பட்டேல்.. முதல் இந்திய ஸ்பின்னர் ஆவாரா?

மான்செஸ்டர்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் அக்சர் படேல் இன்னும் ஒரு விக்கெட் எடுத்தால், சர்வதேச டி20 போட்டிகளில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய சுழற்பந்து வீச்சாளர் என்ற வரலாற்று சாதனையைப் படைப்பார். மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் ட்ராஃபோர்ட் மைதானத்தில் இந்த ஆட்டம் இன்று மாலை 7 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்திய அணியின் துணை கேப்டனாக கூட நியமிக்கப்பட்ட அக்சர் பட்டேல், தற்போது சாதாரண வீரராக தான் விளையாடி வருகிறார்.

கடந்த 2015 அன்று ஹராரேயில் ஜிம்பாப்வேக்கு எதிராக சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான அக்சர் படேல், இதுவரை 97 டி20 போட்டிகளில் விளையாடி 99 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். மான்செஸ்டர் டி20 போட்டியில் அவர் ஒரு விக்கெட் எடுத்தால், 100 விக்கெட்டுகளை எட்டிய முதல் இந்திய ஸ்பின்னர் என்ற பெருமையைப் பெறுவார். 2024 டி20 உலககோப்பை வெல்ல அக்சத் பட்டேல் பேட்டிங்கிலும் முக்கிய பங்காற்றினார். இறுதிப் போட்டியில் கோலியுடன் அவர் இணைந்து போட்ட பார்ட்னர்ஷிப் முக்கிய காரணமாகும்.

Axar Patel

இந்தியாவின் சார்பில் இதுவரை அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகிய மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள் மட்டுமே சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 100 அல்லது அதற்கு மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். இந்திய அணிக்காக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் பட்டியலில் இடதுகை வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் முதலிடத்தில் உள்ளார். அவர் 87 போட்டிகளில் விளையாடி 131 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.

IND vs ENG: வைபவ் சூர்யவன்ஷி எங்களிடம் அறிமுகமாக வேண்டாம்.. இங்கிலாந்து வீரர் சாம் கரண் கலகல

IND vs ENG: வைபவ் சூர்யவன்ஷி எங்களிடம் அறிமுகமாக வேண்டாம்.. இங்கிலாந்து வீரர் சாம் கரண் கலகல

இதில் ஒருமுறை 5 விக்கெட் வீழ்த்தியதும் அடங்கும். ஜஸ்பிரித் பும்ரா 95 போட்டிகளில் 121 விக்கெட்டுகளுடன் இரண்டாவது இடத்திலும், ஹர்திக் பாண்டியா 138 போட்டிகளில் 114 விக்கெட்டுகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர். இவர்களைத் தொடர்ந்து அக்சர் பட்டேல் 97 போட்டிகளில் 99 விக்கெட்டுகளுடனும், யுஸ்வேந்திர சாஹல் 80 போட்டிகளில் 96 விக்கெட்டுகளுடனும், குல்தீப் யாதவ் 54 போட்டிகளில் 95 விக்கெட்டுகளுடனும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

மேலும் புவனேஷ்வர் குமார் 87 போட்டிகளில் 90 விக்கெட்டுகளுடனும் , வருண் சக்ரவர்த்தி 46 போட்டிகளில் 73 விக்கெட்டுகளுடனும் , ரவிச்சந்திரன் அஷ்வின் 65 போட்டிகளில் 72 விக்கெட்டுகளுடனும் மற்றும் ரவி பிஷ்னோய் 45 போட்டிகளில் 64 விக்கெட்டுகளுடனும் இப்பட்டியலில் முக்கிய இடங்களில் உள்ளனர். மேலும், ரவீந்திர ஜடேஜா 74 போட்டிகளில் 54 விக்கெட்டுகளுடனும், வாஷிங்டன் சுந்தர் 61 போட்டிகளில் 51 விக்கெட்டுகளுடனும், யுவராஜ் சிங் 58 போட்டிகளில் 28 விக்கெட்டுகளுடனும் மற்றும் ஹர்பஜன் சிங் 28 போட்டிகளில் 25 விக்கெட்டுகளுடனும் இந்தியாவின் டாப் 10 டி20 ஸ்பின்னர்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.

ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனாக இருக்கும் அக்சர் படேல், ஜூலை 1 அன்று செஸ்டர்-லீ-ஸ்ட்ரீட்டில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் விளையாடினார். ஆனால், மழையின் காரணமாக இரண்டாவது இன்னிங்ஸ் தடைபட்டதால் அவருக்கு பந்துவீச வாய்ப்பு கிடைக்கவில்லை. முன்னதாக, 2026 ஜூன் மாதம் பெல்ஃபாஸ்டில் அயர்லாந்துக்கு எதிராக நடைபெற்ற இரு போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் 2 விக்கெட்டுகளை வீழ்த்திய அவர், இரண்டாவது போட்டியில் விக்கெட் ஏதுமின்றி ரன்களை கட்டுப்படுத்தினார்.

IND A vs SL A: 2வது டெஸ்டிலும் தமிழக வீரர் சாய் சுதர்சன் அபார சதம்.. பலமான நிலையில் இந்தியா ஏ

IND A vs SL A: 2வது டெஸ்டிலும் தமிழக வீரர் சாய் சுதர்சன் அபார சதம்.. பலமான நிலையில் இந்தியா ஏ

உலக அளவில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய சுழற்பந்து வீச்சாளர்களின் பட்டியலில் ஆப்கானிஸ்தானின் ரஷித் கான் 115 போட்டிகளில் 193 விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் உள்ளார். நியூசிலாந்தின் இஷ் சோதி 142 போட்டிகளில் 165 விக்கெட்டுகளுடனும், இங்கிலாந்தின் அடில் ரஷித் 146 போட்டிகளில் 164 விக்கெட்டுகளுடனும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். இலங்கை அணியின் வனிந்து ஹசரங்க 98 போட்டிகளில் 161 விக்கெட்டுகளையும், ஆஸ்திரேலியாவின் ஆடம் ஜாம்பா 118 போட்டிகளில் 153 விக்கெட்டுகளையும் கைப்பற்றி உள்ளனர்.

Story first published: Saturday, July 4, 2026, 14:55 [IST]
Other articles published on Jul 4, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+