Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியா - இங்கிலாந்து 2வது டி20 போட்டி எப்போது? தேதி, நேரம் மற்றும் லைவ் ஸ்ட்ரீமிங் விவரம்

சென்னை: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகின்றன. இந்த தொடரின் முதல் போட்டி முடிந்துள்ள நிலையில் இரண்டாவது போட்டி நாளை நடைபெற உள்ளது. அந்தப் போட்டி நடைபெற உள்ள நேரம், எந்த சேனல் மற்றும் ஓடிடியில் ஒளிபரப்பாகிறது? என்பது பற்றிய விவரங்களை இங்கே பார்க்கலாம்.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கும் இங்கிலாந்து அணி முதலில் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், அதைத் தொடர்ந்து மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரிலும் விளையாட உள்ளது. முதலில் டி20 தொடர் நடைபெற்று வருகிறது.

IND vs ENG 2nd T20 match date and time Where to watch the match in live streaming

டி20 தொடரின் முதல் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்து முடிந்தது. அந்தப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது டி20 போட்டி ஜனவரி 25 சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது.

இந்தப் போட்டி இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு துவங்கும். 6.30 மணிக்கு டாஸ் போடப்படும். இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் முதல் டி20 தொடரை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் குழும தொலைக்காட்சிகளில் நேரலையில் பார்க்கலாம். மொபைல் மற்றும் இணையதளம் மூலம் பார்க்க விரும்புபவர்கள் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் செயலி மற்றும் இணையதளத்தில் போட்டிகளில் காணலாம்.

2025 சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக இரண்டு அணிகளும் தயாராகும் வகையில் இந்த கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இரு அணிகளும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாட உள்ள வீரர்களுக்கு பயிற்சி அளிக்கும் வகையில் இந்த தொடரை பயன்படுத்தி வருகின்றன.

இந்திய அணியில் முகமது ஷமி பிளேயிங் லெவனில் இடம் பெறுவாரா? என்பதே பெரிய கேள்வியாக உள்ளது. முதல் டி20 போட்டியில் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. சென்னையில் அவருக்கு விளையாட வாய்ப்பு அளிக்கப்படுமா? என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம்.

Story first published: Friday, January 24, 2025, 12:24 [IST]
Other articles published on Jan 24, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+