IND vs ENG: விராட் கோலி எனக்கு மகன் மாதிரி.. என்னன்ன சொல்றாங்க பாருங்க.. சேத்தன் சர்மா கொடுத்த ஷாக்!
மும்பை : இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி என் மகனை போன்றவர் என்று பிசிசிஐ தேர்வு குழு முன்னாள் தலைவர் சேத்தன் சர்மா தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வு குழு தலைவராக சுமார் 3 ஆண்டுகளாக செயல்பட்டவர் சேத்தன் சர்மா. இந்திய முன்னாள் வீரரான சேத்தன் சர்மா 2020ஆம் ஆண்டு முதல் 2023 பிப்ரவரி வரை தேர்வு குழு தலைவராக இருந்தார். இதனிடையே டி20 உலகக்கோப்பை தொடரில் அடைந்த தோல்வி காரணமாக சில மாதங்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து தனியார் தொலைக்காட்சி சார்பாக நடத்த ஸ்டிங் ஆபரேஷனில் இந்திய வீரர்கள் பற்றி தரக்குறைவாக பேச வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதுமட்டுமல்லாமல் இந்திய அணி வீரர்கள் பலரும் ஊக்க மருந்து எடுத்து கொள்வதாக கூறி அதிர்வலைகளை ஏற்படுத்தினார். இதனைத் தொடர்ந்து தாமாக முன் வந்து சேத்தன் சர்மா பதவியை ராஜினாமா செய்தார்.
இவரது பதவிக் காலத்தில் தான் விராட் கோலி அனைத்து வகையிலான கிரிக்கெட் போட்டிகளிலும் கேப்டன்சி பதவியை ராஜினாமா செய்தார். அதேபோல் பிசிசிஐ தேர்வு குழுவில் இருந்து அதிகபடியான தகவல்கள் சேத்தன் சர்மா பதவி காலத்தில் தான் வெளி வந்தது. இதன் மூலம் விராட் கோலி கேப்டன்சி பதவியை ராஜினாமா செய்ததற்கு கங்குலி, ஜெய் ஷா மட்டுமல்லாமல் சேத்தன் சர்மாவும் முக்கிய காரணம் என்று பார்க்கப்பட்டது.
அதேபோல் சேத்தன் சர்மா பதவி காலத்தில் மும்பை லாபி அதிகளவில் செல்வாக்கு செலுத்தியது. இந்த நிலையில் விராட் கோலி முன்னாள் வீரர் சேத்தன் சர்மா வெளிப்படுத்தியுள்ள கருத்து ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதில், விராட் கோலி எனது மகனை போன்றவர். அவரை பற்றி நான் ஏன் தவறாக பேச வேண்டும். அவர் நலமாக இருக்க எப்போதும் பிரார்த்தனை செய்கிறேன்.
நிச்சயம அவர் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கம்பேக் கொடுத்து சதங்களாக விளாச தொடங்குவார். இன்னும் சில ஆண்டுகளில் 100 சதங்கள் என்ற சச்சின் சாதனையை எட்டிப்பிடிப்பார். இந்திய கிரிக்கெட்டின் ஐகானிக் வீரர் விராட் கோலி தான். அவர் மாஸ் ரிட்டர்ன்ஸ்-க்காக காத்திருக்கிறேன் என்று கூறியுள்ளார். சமீப காலங்களாக விராட் கோலியை பாராட்டும் வகையில் கங்குலியும் பேசி வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications