Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

3வது டி20: கோலியின் புதிய மைல்கல்..எந்த இந்தியரும் செய்யாததை செய்த ராகுல்.தோனியுடன் சேர்ந்த பட்லர்!

அகமதாபாத்: இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் கோலி, பட்லர், ராகுல் ஆகியோர் பல வித்தியாசமான சாதனைகளை படைத்துள்ளனர்.

Recommended Video

8 விக்கெட் வித்தியாசத்தில் India-வை வீழ்த்திய England.. தொடரிலும் முன்னிலை

இங்கிலாந்துக்கு எதிரான 3வது டி20 போட்டி நேற்று அகமதாபாத்தில் நடைபெற்றது. இதில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இந்நிலையில் நேற்றைய போட்டியில் கோலி புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். அதே போல் தொடக்க வீரர் கே.எல்.ராகுல் எந்த இந்தியரும் செய்யாத சாதனையை செய்துள்ளார்.

தோல்வி

தோல்வி

இரு அணிகளுக்கும் இடையே 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற 3வது போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் இங்கிலாந்து 2 - 1 என்ற புள்ளிக்கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது. இந்திய அணில் கேப்டன் கோலியை தவிர வேறு யாரும் பெரிய அளவில் சோபிக்காததால் 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்நிலையில் பல வித்தியாச சாதனைகளும் இப்போட்டியில் படைக்கப்பட்டுள்ளது.

விராட் கோலி

விராட் கோலி

விராட் கோலி நேற்றைய ஆட்டத்தில் கேப்டனாக தனது 11வது அரை சதத்தை பதிவு செய்தார். இதன் மூலம் டி20ல் அதிக சதமடித்த கேப்டன்கள் பட்டியலில் வில்லியம்ஸுடன் 2வது இடத்தை பகிர்ந்துள்ளார். டி20 கேப்டனாக அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் கோலி 1,421 ரன்களுடன் 2ம் இடத்தை வில்லியம்ஸுடன் பகிர்ந்துள்ளார். முதல் இடத்தில் ஃபின்ச் உள்ளார். விராட் கோலி நேற்றைய ஆட்டத்தில் 4 சிக்ஸர்களை விளாசியதன் மூலம் அதிக சிக்ஸர் அடித்த இந்திய கேப்டன்கள் பட்டியலில் 2ம் இடம் பிடித்துள்ளார். முதல் இடத்தில் தோனி 211 சிக்ஸருடன் உள்ளார்.

 ராகுல்

ராகுல்

கே.எல்.ராகுல் தொடர்ந்து 2 போட்டிகளில் டக் அவுட் ஆகி வெளியேறியுள்ளார். ஒரு இந்திய ஓப்பனர் தொடர்ச்சியாக 2 முறை டக் அவுட் ஆவது இதுவே முதல் முறையாகும். அதே போல் கே.எல்.ராகுல் சர்வதேச டி20 போட்டியில் 4 முறை டக் அவுட் ஆகியுள்ளார். இதனால் அதிகமுறை டக் அவுட்டான ஓப்பனர்கள் பட்டியலில் ரோகித் சர்மாவுடன் முதலிடத்தை பகிர்ந்துள்ளார்.

ஜோஸ் பட்லர்

ஜோஸ் பட்லர்

இங்கிலாந்து வீரர் ஜோஸ் பட்லர் டி20 போட்டியில் 1,554 ரன்களை எடுத்துள்ளார். இதன் மூலம் சர்வதேச டி20 போட்டியில் 1500 ரன்களை கடந்த 3வது வீரரானார் பட்லர். முதல் 2இடங்களில் முகமது செஷாத், தோனி உள்ளனர். சர்வதேச போட்டிகளில் அதிக சிக்ஸர் அடித்த வீரர்கள் பட்டியலில் 212 சிக்ஸருடன் முதல் இடத்தை பிடித்தார். பட்லர் நேற்றைய அரை சதம் மூலம் சர்வதேச போட்டியில் 50வது அரை சதத்தை கடந்த 2வது விக்கெட் கீப்பர் என்ற பெருமையை பெற்றார் முதலிடத்தில் மெக்கல்லம் உள்ளார்.

Story first published: Wednesday, March 17, 2021, 22:52 [IST]
Other articles published on Mar 17, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+