Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs ENG பிளேயிங் 11.. தமிழக வீரர் நீக்கம்? ஆல் ரவுண்டருக்கு வாய்ப்பு.. நான்கு ஃபாஸ்ட் பவுலர்கள்

ராஜ்கோட்: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் விளையாட உள்ள மூன்றாவது டி20 போட்டியில் பிளேயிங் லெவனில் எந்தெந்த வீரர்கள் இடம் பிடிப்பார்கள் என்பது பற்றி பார்க்கலாம். இந்த தொடரின் இரண்டாவது டி20 போட்டிக்கு முன்னதாக நிதிஷ் குமார் ரெட்டி மற்றும் ரிங்கு சிங் நீக்கப்பட்டனர்.

முதுகில் ஏற்பட்ட வலியின் காரணமாக மூன்றாவது டி20 போட்டி வரை ரிங்கு சிங் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டது. நிதிஷ் குமார் ரெட்டிக்கு காயம் ஏற்பட்டதால் அவர் ஒட்டுமொத்தமாக இந்த தொடரில் இருந்தே நீக்கப்பட்டு இருக்கிறார். அவர்கள் இருவருக்கும் பதிலாக சிவம் துபே மற்றும் ரமன்தீப் சிங் ஆகிய இருவரும் அணியில் சேர்க்கப்பட்டனர்.

IND vs ENG 3rd T20 Playing XI Dhruv Jurel Washington Sundar to be dropped

இவர்கள் இருவரும் மிதமான வேகப்பந்து வீசும் பேட்ஸ்மேன்கள். இருவரும் அதிரடியாக ரன் சேர்க்க கூடியவர்கள். மூன்றாவது டி20 போட்டி நடைபெற உள்ள ராஜ்கோட் மைதானம் ரன் குவிப்புக்கு ஏற்ற பிட்ச்சை உடையது. எனவே, சிவம் துபே மற்றும் ரமன்தீப் சிங் ஆகிய இருவரும் பிளேயிங் லெவனில் இடம்பெற வாய்ப்பு உள்ளது.

இரண்டாவது டி20 போட்டியில் விளையாடிய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் துருவ் ஜுரல் நீக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நான்கு ஸ்பின்னர்கள் இந்திய அணியில் இடம் பெற்று இருந்தனர். அவர்களில் ஒருவர் நீக்கப்பட்டு ரமன்தீப் சிங் அணியில் இடம் பெறுவார் என கூறப்படுகிறது.

வருண் சக்கரவர்த்தி, ரவி பிஷ்னோய், அக்சர் பட்டேல் ஆகிய மூன்று ஸ்பின்னர்களும் அணியில் தக்க வைக்கப்படுவார்கள். ஆல் ரவுண்டரான வாஷிங்டன் சுந்தர் நீக்கப்படுவார் என கூறப்படுகிறது. துருவ் ஜுரல் இடத்தில் சிவம் துபேவும், வாஷிங்டன் சுந்தரின் இடத்தில் ரமன்தீப் சிங்கும் விளையாட வாய்ப்பு உள்ளது. முகமது ஷமி இந்தப் போட்டியிலும் விளையாட மாட்டார்.

அந்த வகையில் அர்ஷ்தீப் சிங், ஹர்திக் பாண்டியா, சிவம் துபே மற்றும் ரமன் தீப் சிங் என நான்கு வேகப் பந்துவீச்சாளர்கள் பிளேயிங் லெவனில் இருப்பார்கள். இவர்களில் மூன்று பேர் பகுதி நேர வேகப்பந்துவீச்சாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சஞ்சு சம்சன், அபிஷேக் ஷர்மா, திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ் ஆகியோர் முதல் நான்கு வரிசையில் பேட்டிங் செய்வார்கள்.

இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது டி20 போட்டிக்கான உத்தேச இந்திய அணி -

சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), அபிஷேக் சர்மா, திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), சிவம் துபே, ஹர்திக் பாண்டியா, ரமன்தீப் சிங், அக்சர் படேல், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், வருண் சக்ரவர்த்தி

Story first published: Tuesday, January 28, 2025, 8:35 [IST]
Other articles published on Jan 28, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+