Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஹிட் மேன் ரிட்டன்ஸ்... சூர்யகுமார் யாதவுக்கு அநியாயம்.. மீண்டும் சொதப்பிய ராகுல்.. 3வது டி20 அப்டேட்

அகமதாபாத்: இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் ரோகித் சர்மா மீண்டும் இந்திய அணிக்கு கம்பேக் கொடுத்துள்ள போதும் ரசிகர்கள் சோகமடைந்துள்ளனர்.

Recommended Video

8 விக்கெட் வித்தியாசத்தில் India-வை வீழ்த்திய England.. தொடரிலும் முன்னிலை

இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 3வது டி20 தொடர் இன்று அகமதாபாத்தில் தொடங்கியது. இதில் இந்திய அணியில் முக்கிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கடந்த போட்டியில் சூர்யகுமார் யாதவுக்கு ஆட வாய்ப்பு இல்லாமல் போன நிலையில் இந்த போட்டியில் அணியில் இடம் தரவில்லை.

3வது டி20

3வது டி20

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் 1 - 1 என்ற புள்ளிக்கணக்கில் சமநிலையில் உள்ளது. தொடரில் முன்னிலை பெறுவதற்கான 3வது டி20 போட்டி இன்று அகமதாபாத்தில் தொடங்கியது. இந்திய அணியில் கடந்த 2 போட்டிகளிலும் சொதப்பிய கே.எல்.ராகுலுக்கு பதிலாக இன்று ரோகித் சர்மா களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது.

கே.எல்.ராகுலுக்கு வாய்ப்பு

கே.எல்.ராகுலுக்கு வாய்ப்பு

அனைவரின் எதிர்பார்ப்பின் படி ரோகித் சர்மாவுக்கு இந்த போட்டியில் வாய்ப்பளிக்கப்பட்டது. அதே போல் ஷிகர் தவான் மீண்டும் வெளியே அமர வைக்கப்பட்டார். அதே போல் ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் எதிர்பார்த்திருந்த ரோகித் சர்மா - கே.எல். ராகுல் ஜோடி களமிறங்கினர். ஆனால் சூர்ய குமார் யாதவுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. கடந்த போட்டியில் அவர் அணியில் இருந்தபோதும் ஆடுவதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் தன்னை நீரூபிப்பதற்கு சூர்யகுமார் காத்திருக்க வேண்டியுள்ளது.

திணறல்

திணறல்

இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் மோர்கன், பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி தொடக்க வீரர்கள் ரோகித் சர்மா 15 ரன்களுக்கு அவுட்டாகி வெளியேறினார். அதே போல் கே.எல்.ராகுல் மீண்டும் டக் அவுட்டாகி சொதப்பினார். கடந்த போட்டியில் அசத்திய இஷான் கிஷான் 4 ரன்களுக்கு வெளியேற பண்ட்-ம் 25 ரன்களை எடுத்து ஏமாற்றமளித்தார்.

வெற்றி பெறுமா

வெற்றி பெறுமா

13 ஓவர்களின் முடிவில் இந்திய அணி 74 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து தடுமாறி வருகிறது. இந்திய அணி கேப்டன் கோலி மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் நிதானமாக ஆடி வருகின்றனர். ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக் ஆடிய சூர்யகுமாருக்கு வாய்ப்பளித்திருந்தால் தற்போது இந்திய அணி திணறி இருக்காது என ரசிகர்கள் விமர்சனம் செய்ய தொடங்கிவிட்டனர்.

Story first published: Tuesday, March 16, 2021, 20:24 [IST]
Other articles published on Mar 16, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+